குமரி அனந்தன் காலமானார்: யார் இவர்.? அரசியலில் சாதித்தது என்ன.?

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 93. அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Senior Congress party leader Kumari Ananthan passes away KAK

Congress party leader Kumari Ananthan passes away காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழக பாஜகவின் முக்கிய தலைவராக இருக்ககூடிய தமிழிசையின் தந்தையுமான குமரி அனந்தன் இன்று அதிகாலை காலமானார். அவரதுக்கு வயது 93,  கன்னியாகுமரி மாவட்டம், குமரிமங்கலம் என்ற அகத்தீச்வரத்தில், அரிகிருஷ்ணன் – தங்கம்மாள் தம்பதிக்கு 1933 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதியன்று பிறந்தவர் குமரி ஆனந்தன்.  இலக்கியவாதியாகவும் சிறந்த மேடைப் பேச்சாளராகவும் திகழ்ந்தவர். காங்கிரஸ் கட்சியின் மீதான ஈடுபாடு காரணமாக அக்கட்சியில் இணைந்து பணியாற்றினார். 1977-ம் ஆண்டு நாகர்கோயில் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

Senior Congress party leader Kumari Ananthan passes away KAK

Latest Videos

4 முறை எம்எல்ஏ, ஒரு முறை எம்பி

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் உறுப்பினராக 1980, 1984, 1989 மற்றும் 1991 ஆகிய ஆண்டுகளில் நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.  ஏழை விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கேட்டு நடைபயணம் உள்ளிட்ட மக்கள் நலனுக்காகப் 17 முறை தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.  தமிழகத்தில் தாய்மொழித் தமிழுக்கு எங்கும் முதலிடம் தரப்படவேண்டும், தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகப் படிவங்கள் அனைத்திலும் தமிழுக்கு முதலிடம் தரப்படவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

 குமரி அனந்தன் காந்திய வழியில் தீவிர பற்று கொண்டவர். அவரது அரசியல் வாழ்க்கை சமூக சேவை மற்றும் தமிழ் மொழி மீதான அன்பை அடிப்படையாகக் கொண்டது. இவருக்கு தமிழக அரசு சார்பாக பல்வேறு விருதுகளும் வழங்கப்பட்டுள்ளது. இதன் கடி கடந்த 2024ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில்  ‘தகைசால் தமிழர் விருது’ முதலமைச்சர் ஸ்டாலினால் வழங்கப்பட்டது.. 

வயது மூப்பு காரணமாக உடல் நிலை பாதிப்பு

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே வயது மூப்பு காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தார். அவ்வப்போது மருத்துவமனையில் குமரி அனந்தன் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் குமரி ஆனந்தனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால்  சிகிச்சை பலனின்றி குமரி ஆனந்தன் காலமானார். இவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இவரது உடல் அடக்கம் இன்று மாலை நடைபெறவுள்ளது. 

vuukle one pixel image
click me!