விஜய்யை முதல்வராக்காமல் ஓய மாட்டேன்..! சொந்த ஊரில் செங்கோட்டையன் எடுத்த சபதம்!

Published : Nov 28, 2025, 09:16 PM IST
sengottaiyan

சுருக்கம்

விஜய்யை முதல்வராக்காமல் ஓய மாட்டேன் என்று தவெகவில் இணைந்த செங்கோட்டையன் சொந்த ஊரான கோபிச்செட்டிபாளையத்தில் உறுதியாக கூறினார். தவெகவுக்கு முன்னாள் அமைச்சர்கள் பலர் வருவார்கள் என்றும் கூறினார்.

அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட மூத்த அரசியல்வாதி செங்கோட்டையன் விஜய்யின் தவெகவில் இணைந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கிய செங்கோட்டையனின் வருகை தவெக தொண்டர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது. செங்கோட்டையன் தவெகவுக்கு மிகவும் உறுதுணையாக இருப்பார் என விஜய் தெரிவித்தார்.

கோபிச்செட்டிபாளையத்தில் உற்சாக வரவேற்பு

தவெகவில் இணைந்த உடன் செங்கோட்டையனுக்கு மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பும், ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் அமைப்பு செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தவெகவில் இணைந்த பிறகு முதன் முறையாக செங்கோட்டையன் தனது சொந்த ஊரான கோபிச்செட்டிபாளையம் சென்றார். அவருக்கு தவெக தொண்டர்கள், நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழகத்தை ஆளப்போவது விஜய்

பின்பு தொண்டர்கள் மத்தியில் பேசிய செங்கோட்டையன், ''தமிழகத்தை ஆண்ட கட்சிகளே ஆள வேண்டுமா? அல்லது புதிய தலைமுறையினர் ஆள வேண்டுமா? தமிழ்நாட்டின் மக்கள் மனதில் விஜய் இடம்பிடித்து விட்டார். தமிழகத்தை நாளை ஆளப்போவது விஜய் தான். இதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு நான் வழிகாட்டியாக இருந்தேன். இதேபோல் விஜய்க்கும் வழிகாட்டியாக இருப்பேன். விஜய் முதல்வராக தீவிரமாக களப்பணியாற்றுவேன்'' என்று தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர்கள் வருவார்கள்

தொடர்ந்து பேசிய செங்கோட்டையன், ''நாளை நாம் வரலாறு படைக்க போகிறோம். ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் வருமானத்தை விட்டு விட்டு மக்கள் பணிகளுக்காக விஜய் வந்திருக்கிறார். ஜெயலலிதா படத்தை ஏன் பாக்கெட்டில் வைத்திருக்கிருறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டனர். நான் எந்த படத்தை வைத்தாலும் அரவணைத்து செல்பவராக உங்கள் தலைவர் இருக்கிறார். நமக்கான காலங்கள் கனிந்து வருகின்றன. டிசம்பர் மாதத்துக்குள் நமது கூட்டணி வலிமையாகி விடும். நமது கட்சிக்கு முன்னாள் அமைச்சர்கள் பலர் வர இருக்கின்றனர்'' என்று கூறியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழகம் முழுவதும் நாளை முக்கிய இடங்களில் மின்தடை! எத்தனை மணி நேரம் தெரியுமா?
ஆடு வெட்டி புது சடங்கு உருவாக்கினது தான் பிரச்சனைக்கு காரணமே..! திருப்பரங்குன்றம் பின்னணியின் உண்மை உடைக்கும் திமுக எம்.பி தங்க தமிழ்ச்செல்வன்..!