தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

Published : Nov 28, 2025, 07:53 PM IST
School Holiday

சுருக்கம்

'டிட்வா' புயல் தமிழ்நாட்டை நோக்கி நகர்வதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் நவம்பர் 29-ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை கடலோரப் பகுதிகளில் உருவான 'டிட்வா' (Titwa) புயல் தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை (நவம்பர் 29, சனிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித்துறையின் அறிவிப்பு

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் நாளை (நவம்பர் 29, சனிக்கிழமை) விடுமுறை அளிக்கப்படுகிறது எனக் கூறப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை காலண்டரில் நாளை விடுமுறை என்று குறிக்கப்பட்டுள்ளதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், நாளை எந்தப் பள்ளியிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அரசுபள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.  உத்தரவை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது.

மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு

முன்னதாக, புயல் கரையை நெருங்குவதால், அதிக மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரீகாந்த் உத்தரவிட்டுள்ளார். உத்தரவை மீறி வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேபோல், நாகப்பட்டினம் மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (சனிக்கிழமை) விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலமான புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளது.

டிட்வா புயல்

டிட்வா புயல் காரணமாக சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

டிட்வா புயல் நவம்பர் 30-ஆம் தேதி அதிகாலை சென்னையை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, இராமநாதபுரம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், அதிகாரப்பூர்வ எச்சரிக்கைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

காவல் நிலையத்தில் புகுந்து காவலருக்கு வெட்டு.. தமிழகத்தில் தினமும் 5 படுகொ**லை.. ஷாக் கொடுக்கும் அன்புமணி
தனிக்கட்சியா..? அமித்ஷாவிடம் பேசியது என்ன? உண்மையை போட்டுடைத்த ஓபிஎஸ்!