தமிழக மக்களிடமிருந்து !! 3 வது முறையாக ரூ.74 கோடி மதிப்பில் நிவாரண பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைப்பு..

By Thanalakshmi VFirst Published Jul 23, 2022, 5:53 PM IST
Highlights

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்திலிருந்து வி.டி.சி. சன் கப்பல் மூலம் இலங்கைக்கு 16.356 டன் அரிசி, 201 டன் பால்பவுடர், 39 டன் உயிர்காக்கும் மருந்துகள் என மொத்தம் 16.596 டன் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
 

இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். உணவு உள்ளிட்ட அன்றாட தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். உணவுப்பொருட்கள், எரிவாயு, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட தட்டுப்பாடு காரணமாக ஏராளமான மக்கள் இரண்டு மற்றும் ஒரு வேளை உணவுமுறைக்கு மாறியுள்ளனர்.

மேலும் படிக்க:ஓபிஎஸ் நீங்க அதிமுக தொண்டரா? வெட்கமா இல்லை.. ஓபிஎஸ்சை டாராக கிழித்த சி.வி சண்முகம்

பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக அரசாங்கத்தை கண்டித்து மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி கடந்த மே 18 ஆம் தேதி சென்னை துறைமுகத்தில் இருந்து முதல்கட்டமாக 9.045 டன் அரிசி, 50 டன் ஆவின் பால்பவுடர், 8 டன் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டது. 

மேலும் படிக்க:"எல்லாமே ரத்து.. அதிமுகவில் வாங்க சேர்ந்து செயல்படுவோம்"- ஓபிஎஸ் திடீர் பல்டி

மேலும் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து 2-ம் கட்டமாக கடந்த ஜூன் 22 ஆம் தேதி ரூ. 67.70 கோடி மதிப்பிலான 15 ஆயிரம் டன் எடையுள்ள பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில் 3-ம் கட்டமாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து இலங்கையின் கொழும்பு துறைமுகத்திற்கு ரூ.74 கோடி மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் இன்று எம்.பி கனிமொழி கொடியசைத்து அனுப்பி வைத்தார். உடன் அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் இருந்தனர். 

வி.டி.சி. சன் கப்பல் மூலம் இலங்கைக்கு 16.356 டன் அரிசி, 201 டன் பால்பவுடர், 39 டன் உயிர்காக்கும் மருந்துகள் என மொத்தம் 16.596 டன் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
 

click me!