பி.இ, பி.டெக் பொறியியல் படிப்பில் இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 20 ஆம் தேதி முதல் பி.இ, பி.டெக் பொறியியல் படிப்புகளில் 2022-2023- ஆம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சேருவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த மாதம் 21 ஆம் தேதி வரை சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பி.இ மற்றும் பி.டெக் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இதனிடையே அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் 7-ஆம் தேதி வரை விளையாட்டுப் பிரிவின் கீழ் உள்ள 500 இடங்களில் சேருவதற்கு விண்ணப்பம் செய்த 2,442 பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறவுள்ளது. எனவே மாணவர்கள் தங்களின் அசல் விளையாட்டுச் சான்றிதழ்களை நேரில் வந்து சரிபார்த்துச் செல்ல வேண்டும் என்று பல்கலைக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:விமானத்தில் பயணிக்கு திடீர் நெஞ்சுவலி : தக்கநேரத்தில் காப்பாற்றிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்
இரண்டாம் கட்டமாக, சிபிஎஸ்இ மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவுகள் வெளியானது. இதனால் தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் வரும் 27 அம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பை உயர்கல்வித்துறை வெளியிட்டது.
இந்நிலையில், பி.இ, பி.டெக் பொறியியல் படிப்புகளில் 2022-2023- ஆம் கல்வியாண்டில் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் சேருவதற்கான அவகாசம் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை நீட்டித்து தொழில்நுட்ப கல்வி இயக்கக ஆணையர் லட்சுமி பிரியா உத்தரவிட்டுள்ளார்.பி.இ, பி.டெக் பொறியியல் படிப்புகளில் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான அவகாசம் முடிவடைந்த நிலையில், கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:வரும் 28 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை.. இந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.. அமைச்சர் அறிவிப்பு..