பெண் குழந்தைகள் கண்ணாடிக்கு சமம்!ஆசிரியர்கள் கவனமாக கையாள வேண்டும்.! அழுத்தி பிடித்தால் உடைந்து விடும்-தமிழிசை

By Ajmal Khan  |  First Published Jul 23, 2022, 12:10 PM IST

பெண் குழந்தைகளை ஆசிரியர்கள்  கவனமுடன் கையாள வேண்டும் என கேட்டுக்கொண்ட புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் , கண்ணாடி குடுவைகளை பத்திரமாக பிடிப்பது போல் குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினார். 


பெண் குழந்தைகள்- கண்ணாடிக்கு சமம் 

கல்வி ஒன்றே அனைவரின் வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்கக்கூடியது உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் கல்வி கற்க வேண்டியது அவசியமாகும், அந்த வகையில் கல்வி கற்று மிகப்பெரிய பதவிக்கு வர வேண்டும் என்ற கனவோடு படிக்க சென்ற மாணவி ஶ்ரீமதி உயிர் இழந்த சம்பவம் தமிழக மக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஶ்ரீமதி கடந்த 13 ஆம் தேதி  உயிரிழந்த நிலையில் தமிழக மக்களின் கண்ணீர் அஞ்சலிகளுக்கிடையே 10 நாட்களுக்கு பிறகு இன்று உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில்  குழந்தைகள் கண்ணாடி கோப்பையை போன்றவர்கள் என்றும் குறிப்பாக பெண் குழந்தைகளை ஆசிரியர்கள்  கவனமுடன் கையாள வேண்டும் என புதுவை துனை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கேட்டுக்கொண்டுள்ளார். சமூக ஆர்வலர் அப்சரா ரெட்டி ஏற்பாடு செய்த மனிதநேய விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. 

Tap to resize

Latest Videos

இந்த கோலத்துலயா உன்னை பார்க்கணும்.. மகளின் இறுதி ஊர்வலத்தில் நெஞ்சில் அடித்து கதறிய தாய்.!

ஆசிரியர்கள் கவனமோடு கையாள வேண்டும்

இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு எதிராக பணியாற்றும் சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.  இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விருது வழங்கிய பிறகு பேசிய புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், குழந்தைகள் எப்பொழுதும் தங்களது மகிழ்ச்சியை விட்டுக்கொடுக்க கூடாது என்றும் வாழ்க்கை என்பது வாழ்வதற்காக மட்டுமே முடித்து வைப்பதற்கு அல்ல என்று கூறினார், குழந்தைகள் கண்ணாடி கோப்பையை போன்றவர்கள் என தெரிவித்தவர், குறிப்பாக பெண் குழந்தைகளை ஆசிரியர்கள்  கவனமுடன் கையாள வேண்டும் என கேட்டுக்கொண்டார். கண்ணாடி குடுவைகளை பத்திரமாக பிடிக்க வேண்டும் என தெரிவித்தவர்,  அழுத்தி பிடித்தாலும் உடைந்து விடும், சரியாக பிடிக்கவில்லையென்றாலும் கீழே விழுந்து உடைந்து விடும் என கூறினார். 

மக்களவையில் ஓபிஎஸ் மகனுக்கு ஆப்பு வைக்க துடிக்கும் இபிஎஸ்.. அப்பாவை போலவே சபாநாயகருக்கு கடிதம் கொடுத்த ஓபிஆர்!

பெண் குழந்தைகள் சாதிக்க வேண்டியவர்கள்

எனவே குழந்தைகளை கண்ணாடி குடுவைகளை போல பதமாக கையாள வேண்டும் என ஆசிரியர்களிடம் கேட்டுக்கொண்டார். பெண் குழந்தைகளுக்கு கவுன்சிலிங் மற்றும் தற்காப்பு கலைகளை பயிற்றுவிக்க வேண்டும் என வலியுறுத்தியவர், குழந்தைகள் சாதிக்க பிறந்தவர்கள் குறிப்பாக பெண் குழந்தைகள் தற்கொலை செய்து கொள்ளவே கூடாது எனவும் தமிழிசை சவுந்திரராஜன் கேட்டுக்கொண்டார்.

இதையும் படியுங்கள்

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் உடல் நல்லடக்கம்.. கதறிய அழுத தந்தை, உற்றார் உறவினர்கள்

click me!