இந்த கோலத்துலயா உன்னை பார்க்கணும்.. மகளின் இறுதி ஊர்வலத்தில் நெஞ்சில் அடித்து கதறிய தாய்.!

By vinoth kumar  |  First Published Jul 23, 2022, 11:13 AM IST

பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நிறைவு பெற்றதை அடுத்து இறுதி ஊர்வலம் தொடங்கியுள்ளது. கண்ணீர் மல்க ஸ்ரீமதிக்கு பிரியாவிடை உறவினர்கள் கொடுத்து வருகின்றனர்.


பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நிறைவு பெற்றதை அடுத்து இறுதி ஊர்வலம் தொடங்கியுள்ளது. கண்ணீர் மல்க ஸ்ரீமதிக்கு பிரியாவிடை உறவினர்கள் கொடுத்து வருகின்றனர். 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 13ம் தேதி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தார். நீதிமன்ற உத்தரவை அடுத்து, மாணவியின் உடல் இன்று அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாணவியின் உடல் அவரது சொந்த ஊருக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- மாணவியின் உடலை எடுத்து சென்ற ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியது..

undefined

ஆம்புலன்ஸ் வழியில் சிறிய விபத்தில் சிக்கிய நிலையில், மாணவியின் உடல் பாதுகாப்புடன் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், மாணவியின் உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டதை அடுத்து ஊர் பொதுமக்கள் குவிந்து அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து, மாணவியின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நிறைவு பெற்றதை அடுத்து இறுதி ஊர்வல வாகனத்தில் ஸ்ரீமதியின் உடல் ஏற்றப்பட்டு ஊர்வலம் தொடங்கியது. பின்னர், பெரிய நெசலூர் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் மாணவி ஸ்ரீமதியின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது. அப்போது, ததாய் நீதி கிடைக்காமலேயே அடக்கம் செய்கிறோம் என மாணவியின் தாய் கண்ணீர் விட்டு கதறுகிறார்.

இதையும் படிங்க;- 11 நாட்களுக்கு பிறகு கதறி அழுத படியே மாணவியின் உடலை பெற்றுக்கொண்ட பெற்றோர்.. கண்ணீர் வரவழைக்கும் காட்சி

click me!