11 நாட்களுக்கு பிறகு கதறி அழுத படியே மாணவியின் உடலை பெற்றுக்கொண்ட பெற்றோர்.. கண்ணீர் வரவழைக்கும் காட்சி

By vinoth kumarFirst Published Jul 23, 2022, 7:39 AM IST
Highlights

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இருந்து மாணவியின் உடலை அவரது பெற்றோர் பெற்றுக் கொண்டனர். மாணவியின் தாய் செல்வி கையெழுத்திட்டு உடலை பெற்றுக் கொண்டார். 11 நாட்களுக்கு பிறகு மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இருந்து மாணவியின் உடலை அவரது பெற்றோர் பெற்றுக் கொண்டனர். மாணவியின் தாய் செல்வி கையெழுத்திட்டு உடலை பெற்றுக் கொண்டார். 11 நாட்களுக்கு பிறகு மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த  மாணவி ஶ்ரீமதி கடந்த 13ம் தேதி பள்ளி விடுதியில் உள்ள மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டாத கூறப்பட்டது. இந்நிலையில், மாணவியின் மர்ம மரணம் தொடர்பாக நீதி கேட்டு தொடர் போராட்டம் நடைபெற்றது. அமைதியாக நடைபெற்று வந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதில், பள்ளி முற்றிலுமாக தீக்கறையானது. 

இதையும் படிங்க;- பள்ளியில் சூறையாடப்பட்ட பொருட்கள்..!தண்டோரா மூலம் எச்சரிக்கை..நள்ளிரவில் சாலையில் வீசி சென்ற கிராம மக்கள்..

இதனையடுத்து மாணவி மரணம் தொடர்பாக ஶ்ரீமதியின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்தின் மீது குற்றம்சாட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு மாணவியின் உடலை பெறாமல் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் மாணவி உடல் கூராய்வு தொடர்பாக நீதிமன்றத்தில் மாணவியின் தந்தை ராமலிங்கம் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து  சென்னை உயர்நீதிமன்றம், திருச்சி மருத்துவர் ஜூலியான ஜெயந்தி, சேலம் மருத்துவர் கோகுல ரமணன், விழுப்புரம். மருத்துவர் கீதாஞ்சலி ஆகியோர் அடங்கிய குழுவினர் தடையவியல் நிபுணர் முன்னிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மறு உடற்கூறாய்வு செய்ய உத்தரவிட்டிருந்தனர்.  

ஆனால், மாணவியின் தந்தை தரப்பில் மருத்துவர்கள் நிய மிக்கப்படாத தால், அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதற்கிடையில், உயர்நீதிமன்ற உத்தரவின்படி மருத்துவர்கள் குழு, மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்தது. மறுபிரேத பரிசோதனை செய்த உடலை ஸ்ரீமதி பெற்றோரை வாங்கிக் கொள்ள உத்தரவிட கோரி அரசு தரப்பில் உயர்நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமாரிடம் முறையிடப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது மகளின் உடலை நாளை நண்பகல் 11 மணிக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு பெற்றுக் கொள்ளா விட்டால் காவல் துறை சட்டப்படி இறுதி சடங்குகளை நடத்தும் என்றார். 

இதையும் படிங்க;- கள்ளக்குறிச்சி மாணவி இறுதி சடங்கில் வெளியூர் ஆட்களுக்கு அனுமதி இல்லை… சட்ட ஒழுங்கை காக்க போலீஸார் நடவடிக்கை!!

இதனையடுத்து, மாணவியின் தந்தை மகளின்  உடலை பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்தார். இந்நிலையில், மாணவி ஸ்ரீமதியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பலத்த பாதுதுகாப்புக்கு இடையே மாணவியின் உடலை பெற்றுக்கொண்டனர். வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி, மத்திய மண்டல ஐஜி சந்தோஷ்குமார் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது. மருத்துவமனையில் மாணவி உடலை பெற்றுகொண்ட நிலையில் சொந்த ஊர் கொண்டு செல்லப்படுகிறது. ஏற்கனவே கள்ளக்குறிச்சி மாணவி இறுதி சடங்கில் வெளியூர் ஆட்களுக்கு அனுமதி இல்லை என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இதனையடுத்து, மாணவியின் சொந்த கிராமத்தில் 800க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

click me!