தமிழகத்தில் மின் கட்டணம் கம்மியா? அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்வது என்ன?

By Narendran SFirst Published Jul 22, 2022, 9:39 PM IST
Highlights

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கட்டணம் குறைவாக உள்ளதாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். 

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கட்டணம் குறைவாக உள்ளதாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மின் வாரியத்தினுடைய நிலைமைகள் சீரழிந்ததற்கு காரணம் கடந்த ஆட்சியாளர்கள். குறிப்பாக கடந்த 10 வருடங்களில் மின்சாரத் துறைக்கு ஏற்பட்ட நிதி இழப்பு எவ்வளவு?  10 ஆண்டுகளில் மின்சார வாரியத்திற்கு கூடுதலாக ஏற்பட்ட  கடன் சுமை எவ்வளவு? 10 ஆண்டுகளில் ஆண்டுதோறும் செலுத்தக்கூடிய வட்டி விகிதம் அதாவது ஒரு ஆண்டிற்கு எவ்வளவு உயர்ந்திருக்கிறது?  எதனால் அந்த வட்டி உயர்ந்தது? என்ன விலைக்கு கடந்த ஆட்சியில் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது? எப்படி நிர்வாகம் செய்யப்பட்டது. ரூ.1,59,000 கோடி தமிழ்நாடு மின்சார வாரியத்தினுடைய கடன், இவ்வளவு கடன் வாங்கி கடந்த 10 ஆண்டுகளில் மின்சார வாரியத்தின் சொந்த உற்பத்தி நிறுவுதிறன் அதிகரிப்பட்டதா என்றால் இல்லை. 

இதையும் படிங்க: மாஜி அமைச்சர்கள் வீடுகளில் திமுக அரசின் ரெய்டு ஏன்..? காரணத்தை சொல்லி பொளந்து கட்டும் பொள்ளாச்சி ஜெயராமன்.!

தனியாரிடம் கொள்முதல் செய்யப்பட்டது, தனியாரிடம் ஒப்பந்தங்கள் போடப்பட்டன. ஆனால் வாரியத்தினுடைய சொந்த உற்பத்தி அதிகரிக்கப்படவில்லை. ரூ.1,59,000 கோடி கடன் கடந்த ஆட்சியினுடைய நிர்வாக கோளாறுகளின் காரணமாக ஏற்பட்ட கடன் சுமை குறிப்பாக, ஆண்டுக்கு ரூ.16,500 கோடி வட்டி கட்டுகிறோம் என்றால் அது யாரால் ஏற்பட்ட இழப்பு? எதனால் வந்த வட்டி? கடந்த அதிமுக ஆட்சியில் மின் கட்டணமே உயர்த்தப்படவில்லை என்று கூறியுள்ளார்கள். கடந்த 2012, 2013, 2014ல் தொடர்ந்து மின் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக 37 விழுக்காடு அளவிற்கு ஒரே ஆண்டில் மின் கட்டணத்தை உயர்தியது கடந்த அதிமுக அரசு. இதையெல்லாம் மறைத்து, மறந்து உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வெளியிடுகிறார்கள். இந்த மின் கட்டணத்துடைய உயர்வை பொறுத்தவரைக்கும் எந்தளவிற்கு ஒன்றிய அரசு அழுத்தம் கொடுத்திருக்கிறது, எந்த அளவிற்கு கடிதங்களை அனுப்பி 28 முறை ஒன்றிய அரசு REC, CFC நிதி நிறுவனங்கள் கடிதம் எழுதியுள்ளன.

இதையும் படிங்க: முற்போக்கான படைப்புகள் திரையை ஆளட்டும்.. தேசிய விருது வென்றவர்களை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின் !

வங்கிகள் கடன் வழங்க முடியாத அளவிற்கு ஒரு சூழ்நிலையை உருவாக்கி கண்டிப்பாக மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்கள். மின் கட்டண உயர்வைப் பொறுத்தவரை பொது மக்களுக்கு, அதாவது அடித்தட்டு மக்களுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை. வீடு மற்றும் குடிசை பயன்பாட்டுவாசிகள் மொத்தம் 2.37 கோடி பேர் உள்ளனர். அதில் ஒரு கோடி பேருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. கடந்த ஆட்சியின் நிர்வாக சீர்கேடு மற்றும் ஒன்றிய அரசின் காரணமாக தான் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.  எந்தவிதத்திலும் அடிதட்டு மக்களுக்கு பாதிப்பு இல்லை. கர்நாடகா மற்றும் குஜராத் மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் மின் கட்டணங்கள் குறைவு. ஆனால் அங்கெல்லாம் மின் கட்டணம் அதிகமாக உள்ளது ஆனால் அங்கெல்லாம் போராட்டங்கள் நடத்தப்படுவதில்லை.  தமிழ்நாட்டில் தான் போராட்டங்களை அறிவித்துள்ளார்கள். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் மின் கட்டணம் குறைவாக உள்ளது என்று தெரிவித்தார். 

click me!