ஐஜி பொன்.மாணிக்கவேல் மீதான புகார்... சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!

By Narendran SFirst Published Jul 22, 2022, 8:04 PM IST
Highlights

ஐஜி பொன்.மாணிக்கவேலுக்கு எதிரான புகாரில் சிபிஜ விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐஜி பொன்.மாணிக்கவேலுக்கு எதிரான புகாரில் சிபிஜ விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக சர்வதேச கடத்தல் கும்பலோடு கூட்டு சேர்ந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சாமி சிலைகளைக் கடத்தியதாக திருவள்ளூர் மாவட்ட டிஎஸ்பியாக இருந்த காதர்பாஷா மீது குற்றம்சாட்டப்பட்டது. அதன்பேரில் காதர்பாஷா பணியிடை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் பழிவாங்கும் நோக்கில் தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்த சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என காதர் பாஷா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இதையும் படிங்க: 10ம் வகுப்பு படித்தால் போதும்..ரயில்வே துறையில் அட்டகாசமான வேலைவாய்ப்பு இதோ !

அவரது மனுவில், பழவலூர் சிலைக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான தீனதயாளனை தப்பிக்க வைப்பதற்காக, அவருடன் கூட்டு சேர்ந்து அதிகார ரீதியில் தன்னை பழிவாங்கும் நோக்கிலும் தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்ததாகவும், ஜாமீனில் விடுதலையான தன்னை மற்றொரு பொய் வழக்கில் சட்டவிரோதமாக கைது செய்து சிறையில் அடைத்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார். மேலும் உயர் நீதிமன்றத்தையும், சிறப்பு நீதிமன்றத்தையும் தவறாக பயன்படுத்திய பொன்.மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்க கோரி உள்துறை செயலாளருக்கும், டிஜிபிக்கும் மனு அளித்தேன். 

இதையும் படிங்க: காவேரி கூக்குரல் மூலம் தமிழ்நாட்டில் 1 கோடி மரக்கன்றுகள் நட திட்டம்.! ரூ.3-க்கு டிம்பர் மரக்கன்றுகள் விநியோகம்

ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்காததால் தன் புகாரின் அடிப்படையில் பொன்.மாணிக்கவேல் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், ஓய்வுபெற்ற ஜஜி பொன்.மாணிக்கவேல் மீதான புகார் மீது சிபிஐ விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் டிஐஜி அந்தஸதுக்கு குறையாத அதிகாரி விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

click me!