முற்போக்கான படைப்புகள் திரையை ஆளட்டும்.. தேசிய விருது வென்றவர்களை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின் !

By Raghupati RFirst Published Jul 22, 2022, 9:16 PM IST
Highlights

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் இசையில் உருவான சூரரைப்போற்று திரைப்படத்திற்கு 5 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

68வது  தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் இசையில் உருவான சூரரைப்போற்று திரைப்படத்திற்கு 5 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சூர்யா ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகிறார்கள்.

இன்று தேசிய விருதுகள் குறித்த அறிவிப்பில் சூரரைப்போற்று படம் பெற்ற ஐந்து விருதுகள் பின்வருமாறு, சிறந்த படம் - 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம், சிறந்த நடிகர்: சூர்யா, சிறந்த நடிகை - அபர்ணா பாலமுரளி, சிறந்த இசையமைப்பாளர் - ஜிவி பிரகாஷ், சிறந்த திரைக்கதை - சுதா கொங்கரா பெற்றுள்ளனர். மண்டேலா படத்திற்கு சிறந்த வசனத்திற்கான விருதினையும், சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதினையும் மண்டேலா படம் பெற்றுள்ளது. 

மேலும் செய்திகளுக்கு..அதிமுகவுக்கு ஓபிஎஸ் வரலாம்.. இது அண்ணன் - தம்பி சண்டை தாங்க - செல்லூர் ராஜு கொடுத்த சிக்னல்!

அதேபோல இயக்குனர் வசந்த் இயக்கத்தில் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படம் 3 பிரிவுகளில் தேசிய விருதினை பெற்றுள்ளது. இந்நிலையில், தேசிய விருது பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த அனைவருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

-இல் விருதுகளைக் குவித்துத் தமிழ்த்திரையுலகுக்குப் பெருமை சேர்த்துள்ள தம்பி , , , உள்ளிட்ட படக்குழுவினருக்கும்; (1/3)

— M.K.Stalin (@mkstalin)

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘68-வது தேசிய சினிமா விருதில் விருதுகளைக் குவித்துத் தமிழ்த்திரையுலகுக்குப் பெருமை சேர்த்துள்ள தம்பி சூர்யா, சுதா கொங்கரா, ஜி.வி.பிரகாஷ், அபர்ணா முரளி உள்ளிட்ட சூரரைப் போற்று படக்குழுவினருக்கும்; இயக்குநர் வசந்த், லட்சுமி ப்ரியா, ஸ்ரீகர் பிரசாத் உள்ளிட்ட `சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும்' படக்குழுவினருக்கும், மடோன் அஸ்வின், யோகி பாபு உள்ளிட்ட மண்டேலா படக்குழுவினருக்கும் எனது பாராட்டுகள். அனைத்து விருதாளர்களுக்கும் வாழ்த்துகள். சமூகப் பொறுப்புணர்வு மிகுந்த முற்போக்கான படைப்புகள் திரையை ஆளட்டும்’ என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..பள்ளியில் மயங்கி விழுந்த ஸ்ரீமதி.. பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியீடு !

click me!