BJP vs Congress : என் வழக்கின் வரலாறு.! அறைகுறை அண்ணாமலைக்கு தெரியுமா.? இறங்கி அடிக்கும் செல்வப்பெருந்தகை

By Ajmal Khan  |  First Published Jul 11, 2024, 11:00 AM IST

நான் மன்னிப்பு கேட்கவில்லை, வழக்கை ரத்து செய்யவும் அனுமதி கேட்கவில்லை. இதுதான் என்னுடைய பின்னணி என தெரிவித்துள்ள செல்வப்பெருந்தகை, உங்கள் வரலாறு, பின்னணி மற்றும் உங்களின் பாரம்பரியம் அப்படிப்பட்டது இல்லை. நீங்கள் மன்னிப்பு கேட்டவர்கள், மண்டியிட்டவர்கள் என அண்ணாமலையை செல்வப்பெருந்தகை கடுமையாக விமர்சித்துள்ளார். 
 


அண்ணாமலை- செல்வப்பெருந்தகை மோதல்

தமிழகத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும்,  காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகைக்கும் இடையே வார்த்தை போர் முற்றியுள்ளது. ஒருவரை ஒருவர் சரமாரியாக விமர்சித்து வருகிறார்.  முன்னதாக தமிழக பா.ஜ.கவின் ரவுடிகளின் 32 பக்க உளவுத்துறை அறிக்கையை காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டார். அப்போது பேசிய செல்வப்பெருந்தகை என்னை ரவுடி என்று அண்ணாமலை கூறி இருக்கிறார்.

Tap to resize

Latest Videos

நான் ரவுடி என்று நிரூபிக்க முடியுமா? அண்ணாமலை ஐ.பி.எஸ் படித்தாரா? என்ற சந்தேகம் எனக்கு வருகிறது.  என்னை ரவுடி என்று அவதூறு பேசிய அண்ணாமலை மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது வழக்கு தொடரப்படும். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தால் அண்ணாமலைக்கு முன் ஜாமீன் கிடைக்குமா ? இந்த விவகாரத்தை நாடு முழுவதும் கொண்டு செல்வோம் என தெரிவித்திருந்தார்.

ADMK EPS : எடப்பாடியை புறக்கணித்தார்களா அதிமுக தொண்டர்கள்.! விக்கிரவாண்டி தேர்தலில் நடந்தது என்ன.?

மன்னிப்பு கேட்க முடியாது

இதற்கு பதில் அளித்த அண்ணாமலை. செல்வப்பெருந்தகை கடந்து வந்தப் பாதை எனக்கூறி அவர் மீதான வழக்குகளை பட்டியலிட்டிருந்தார். மேலும் குண்டாஸ் வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருந்ததை இல்லை என்கிறாரா? இவரை வேறு எப்படிக் குறிப்பிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்? வாழும் மகாத்மா என்றா? தனது கொள்கைக்கு நேரெதிர் கட்சியில் இணைந்து, காந்தி வழி வந்தேன் என்று நாடகமாடினால் செய்த குற்றங்கள் இல்லை என்று ஆகிவிடுமா? என்றும் கேள்விகளை எழுப்பியிருந்தார்.  இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள வீடியோவில்,  2003 ஆம் ஆண்டு பாஜக மத்தியில் ஆட்சியின் போது, தமிழகத்தில் உள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பினர் என் மீது புகார் அளித்து  உண்மைக்கு புறம்பான வழக்குகளில் என்னை சிறையில் அடைத்தார்கள்.

குண்டாஸ் வழக்கில் ஜெயிலுக்கு போன உங்களை வாழும் மகாத்மா என அழைக்கவா? செல்வப்பெருந்தகைக்கு அண்ணாமலை கேள்வி!

வழக்கின் பின்னனி இது தான்

அப்போது நீதிமன்றத்தில் இந்த வழக்கை  தீவிரமாக விசாரிக்க வேண்டும். சிபிசிஐடி அல்லது சிபிஐ கொண்டு விசாரிக்க வேண்டும் என மனு கொடுத்தேன். அப்போது நீதிபதியும் சிபிஐக்கு மாற்றலாம் என அரசிடம் கேள்வி எழுப்பிய நிலையில், அன்றிருந்த தமிழக அரசின் வழக்கறிஞர் இந்த வழக்கில் தமிழ்நாடு காவல்துறையே திரும்ப பெறுகிறோம் அல்லது ரத்து செய்துவிடுங்கள் என்று கூறியது. இது தான் என்னுடைய வரலாறு. இந்த வழக்கில்  நான் மன்னிப்பு கேட்கவில்லை, ரத்து செய்யவும் அனுமதி கேட்கவில்லை. இதுதான் என்னுடைய பின்னணி. அவர்களே முன் வந்து ரத்து செய்தார்கள். நான் இந்த வழக்கை ரத்து செய்யக்கூடாது, வழக்கை நடத்த வேண்டும் என தெரிவித்தேன். நான் நிரபராதி என கூறவேண்டும் என தெரிவித்தேன். இது தான் இந்த வழக்கின் பின்னனி

என் வழக்கின் வரலாறு அறைகுறை அண்ணாமலைக்குத் தெரியுமா? pic.twitter.com/qcoqioua6D

— Selvaperunthagai K (@SPK_TNCC)

 

அரைகுறை அண்ணாமலை

ஆனால் உங்கள் வரலாறு, பின்னணி மற்றும் உங்களின் பாரம்பரியம் அப்படிப்பட்டது இல்லை. நீங்கள் மன்னிப்பு கேட்டவர்கள், மண்டியிட்டவர்கள். உயர் நீதிமன்ற ஆணையை படியுங்கள். எதையும் தெரிந்து கொள்ளாமல் அண்ணாமலை அரைகுறையாக பேசுவது எந்த விதத்தில் நியாயம்? என அந்த வீடியோவில் செல்வப்பெருந்தகை கேள்வி கேட்டுக்கொண்டுள்ளார்.
 

click me!