சுயமரியாதை இயக்கம் முதல் நாடகமேடை வரை... படிப்படியாக வளர்ந்த ஆர்.எம்.வீரப்பனின் குடும்பப் பின்னணி!

By SG Balan  |  First Published Apr 9, 2024, 3:59 PM IST

திரைப்படம் மற்றும் அரசியல் இரண்டிலும் மிகுந்த மரியாதைக்குரியவராக விளக்கிய ஆர்.எம். வீரப்பன், ஒரு சாதாரண குடும்பத்தில் ஏழு குழந்தைகளில் கடைசி மகனாகப் பிறந்தார். 


ஆர்.எம்.வி என்று அழைக்கப்படும் ஆர்.எம்.வீரப்பன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று காலமானார். 98 வயதான அவர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோருடனும் நெருங்கிப் பழகியவர்.

இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சராக இவரது பங்களிப்புகள், மறைந்த காஞ்சிப் பீடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்களால் பாராட்டப்பட்டது. திரைத்துறையிலும் சாதித்துள்ள ஆர்.எம்.வீ. எம்.ஜி.ஆர்., ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளார்.

Tap to resize

Latest Videos

1996ஆம் ஆண்டு, “ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது” என்று ரஜினிகாந்த் கூறியதற்கு ஆர்.எம்.வீ. தான் காரணம் என்று என்பது அதிகம் அறியப்படாத விஷயம்.

RM Veerappan Death : முன்னாள் அமைச்சர் ஆர் எம் வீரப்பன் 98 வயதில் காலமானார்!!

ஆர்.எம்.வீ. குடும்பப் பின்னணி

ஆர்.எம்.வீ. என அழைக்கப்படும் இராம. வீரப்பன் ராமசாமி - தெய்வானை தம்பதிக்கு 1926ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராக்கோட்டை கிராமத்தில் பிறந்தார்.

மதுரை திருப்பரன்குன்றத்தில் 1956ஆம் மார்ச் 12ஆம் தேதி இவருக்கும் ராஜம்மாள் என்பவருக்கும் அறிஞர் அண்ணா தலைமையில் திருமணம் நடைபெற்றது. அதில் என். எஸ். கிருஷ்ணன். எம். ஜி. சக்ரபாணி. ம. கோ. இராமச்சந்திரன். எஸ். எஸ். ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

வீரப்பன் - ராஜம்மாள் தம்பதிக்கு 3 மகள்கள் மற்றும் 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகள் திருமதி செல்வி, வீனஸ் பிக்சர்ஸின் வீனஸ் கோவிந்தராஜனின் மகனான டி.ஜி. தியாகராஜனை மணந்தார். தியாகராஜனும் பிரபல சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். 

இளமையில் ஆர்.எம்.வீ.:

திரைப்படம் மற்றும் அரசியல் இரண்டிலும் மிகுந்த மரியாதைக்குரியவராக விளக்கிய இவர், ஒரு சாதாரண குடும்பத்தில் ஏழு குழந்தைகளில் கடைசி மகனாகப் பிறந்தார். ஆர்.எம்.வி., சிறுவயதிலேயே நாடகம் மற்றும் பாடலில் ஈர்க்கப்பட்டார். அவரது தந்தையின் மரணம் மற்றும் குடும்பத்தின் நிதி நிலைமை அவரது கல்வியை 9ஆம் வகுப்பில் நிறுத்த வைத்தது. அவர் நாச்சியார்புரத்தில் உள்ள அவரது மைத்துனரின் கடைக்கு உதவியாக அனுப்பப்பட்டார்.

சிறுவயதில், ஆர்எம்வி குறும்புக்காரராகவும், ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதில் கண்டிப்பானவராகவும் இருந்ததால், சிங்கப்பூரில் உள்ள ஒரு உறவினரின் உதவியாளராக அனுப்ப முடிவு செய்தனர். ஆனால், வீரப்பன் அதைத் தவிர்த்து பிரபல மேடைக் கலைஞர்களான டி.கே.சண்முகம் சகோதரர்கள் முகாமிட்டிருந்த காரைக்குடிக்கு பயணம் செய்தார்.

அவரது பாடும் திறமையைச் சோதித்துவிட்டு டி.கே.எஸ். சகோதரர்கள் அவரை தங்கள் குழுவில் சேர்த்துக்கொண்டனர். அவருடன் டி.வி.நாராயணசாமி, கே.ஆர்.ராமசாமி, நாராயண பிள்ளை மற்றும் பலர் இசை நிகழ்ச்சிகளை நடத்தினர். மேடை நாடகம் மீதான காதலுக்கு ஈடாக திராவிட இயக்கத்தின் மீதான ஆர்வமும் இருந்தது. அதுவே சி.என்.அண்ணாதுரை மீதான பற்றாக மாறியது.

18 வயது இளைஞனாக இருந்தபோது பெரியாரின் சுயமரியாதை இயக்கத்ததில் பங்கெடுத்து மதம் மாறியவர்களில் ஒருவரான ராம சுப்பையாவுடன் இணைந்து பெரியாரின் சுற்றுப்பயணங்களுக்கு உதவினார். ஆர்.எம்.வி.யின் ஒழுக்கம், சுறுசுறுப்பு, சமயோசிதம் மற்றும் ஒருமைப்பாடு ஆகியவை பெரியாரின் பாராட்டைப் பெற்றுத் தந்தன.

ஆனால, நாடகத்துறையில் இருந்த ஈடுபாடு காரணமாக ஆர்.எம்.வி மீண்டும் கிருஷ்ணா நாடக சபாவை நடத்திய கே.ஆர்.ராமசாமியுடன் இணைந்து செயல்படத் தொடங்கினார். பிறகு ஆர்எம்வி அந்த நாடகக் குழுவை விட்டு வெளியேறினார். அறிஞர் அண்ணா அவரை தன்னுடன் வைத்துக்கொண்டார். பத்து மாதங்களுக்குப் பிறகு கே.ஆர்.ராமசாமி மீண்டும் ஆர்.எம்.வி.யின் உதவியை நாடி வந்ததால், அண்ணா ஆர்.எம்.வியை அவருடன் திருப்பி அனுப்பினார்.

மக்கள் திலகத்தின் "வேட்டைக்காரன்".. படத்திலிருந்து நீக்கப்பட்ட "கன்னடத்து பைங்கிளி" - என்ன காரணம் தெரியுமா?

எம்.ஜி.ஆர்.க்கு அடுத்து...

ஆர்.எம்.வி மற்றும் எம்.ஜி.ஆர் இருவருடனும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த பாடலாசிரியர் கவிஞர் வாலி, எம்.ஜி.ஆருக்குப் பின் ஆர்.எம்.வி அவரது இடத்திற்கு வந்திருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். அது ஏன் நடக்கவில்லை என்பது விடை தெரியாத பல கேள்விகளில் ஒன்று என்றும் அவர் சொல்கிறார்.

ஜெயலலிதாவை எம்ஜிஆர் முழுமையாகப் புரிந்துகொண்டிருந்தார் என்றும் இன்னும் ஒருவாரம் அவர் வாழ்ந்திருந்தால், ஜெயலலிதாவை முழுவதுமாக விலக்கிவைத்திருப்பார் என்றும் ஆர்எம்வி கூறியிருக்கிறார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

யார் இந்த ஆர்.எம்.வீரப்பன்? எம்.ஜி.ஆரின் வலதுகரம்; ரஜினிக்காக ஜெயலலிதாவை பகைத்துக் கொண்டவர்!

click me!