நாட்டை குட்டிச்சுவரா ஆக்கியதே காங்கிரஸ் தான்! அவங்கள விமர்சிக்கலனா எப்படி விஜய்? சீறும் சீமான்!

Published : Sep 04, 2025, 02:37 PM IST
seeman vs vijay

சுருக்கம்

நீதிமன்றம் தான் எல்லாவற்றையும் முடிவு செய்கிறது என்றால், சட்டமன்றம், பாராளுமன்றம் எதற்கு? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், காங்கிரஸ் செய்ததைத்தான் பாஜகவும் செய்கிறது, EVM பிரச்சனையை ராகுல் காந்தி தீர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்: இந்த நாட்டின் நிர்வாகத்தை நீங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும். நீண்ட காலமாக எது ஒன்றுமே நீதிமன்றத்தின் மூலமாக செயல்படுத்துவது என்பதை அதிகாரம் முடிவு செய்து கருக்கிறது. அப்படி என்றால் சட்டமன்றம் நாடாளுமன்றம் எதற்கு என்ற கேள்வி எழுகிறது. நீட் தேர்வு எழுத வேண்டுமா? வேண்டாமா? என்பதை நீதிமன்றம் முடிவெடுக்கிறது. கச்சத்தீவை மீட்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை நீதிமன்றம் முடிவெடுக்கிறது. காவிரியில் நீர் கொடுக்க வேண்டுமா? கொடுக்க வேண்டாமா? என்பதை நீதிமன்ற முடிவு செய்ய வேண்டும்.

நாட்டை ஆளும் தலைவர்களுக்கு தேர்வு

முல்லைப் பெரியாறு அணையை கட்ட வேண்டுமா? வேண்டாமா? என்பதை நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும். எதை ஒன்றையுமே நீதிமன்றம் தான் முடிவெடுக்கும் என்றால், சட்டமன்றம், பாராளுமன்றம் எதற்காக உள்ளது?? அப்படியானால் மக்களாட்சி என்பது இங்கு சொல்லாட்சியாக மட்டும் தான் உள்ளது. எல்லாத்துக்கும் தேர்வு எழுத வேண்டும் என சொல்பவர்கள், அமைச்சர், பிரதமர், உள்துறை அமைச்சர், முதல்வர் என ஏன் எந்த தேர்வும் எழுதுவது இல்லை. மருத்துவம், ஆசிரியர் உட்பட அனைத்திற்கும் தகுதியானவர்கள் வர வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால் நாட்டை ஆளும் தலைவர்களுக்கு எந்த தேர்வும் இருப்பது இல்லையே ஏன்??

ராகுல் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வருவாரா?

காங்கிரஸ் இருக்கும் போது செய்ததைத் தான் பி.ஜே.பி தற்போது ஆட்சியில் இருக்கும் பொழுது செய்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது நேர்மையாக தான் வாக்குப் பதிவு நடந்தது என்பதை எங்கு வந்து சத்தியம் செய்வீர்கள். EVM எந்திரத்தில் இது போன்ற பிரச்சனைகள் நடக்கும் என்பது மூளை இருக்கும் அனைவருக்கும் தெரியும். EVM எந்திரத்தை எத்தனை நாடுகள் பயன்படுத்துகிறது என ராகுல் காந்தியை வந்து சொல்லச் சொல்லுங்கள். இந்த எந்திரத்தை தயாரித்துக் கொடுக்கும் ஜப்பான் இதை பயன்படுத்துகிறதா??. மூன்றே நாடுகள் தான் இதை வைத்து இருக்கிறது. பங்களாதேஷ், நைஜீரியா, மற்றும் இந்தியா இவை மூன்றுமே ஊழலில் பெருத்த நாடுகள். பங்களாதேஷ் இதை தூக்கி எறிந்து விட்டது, தற்போது நைஜீரியா, இந்தியாவும் தான் இதை வைத்து இருக்கிறது.. அதில் முறைகேடு நடக்கிறது என்றால் அந்த முறையையே தூக்கி போட வேண்டியது தானே?? ராகுல் காந்தி எந்திரத்தை தூக்கிப் போட்டு விட்டு பழையபடி வாக்குச் சீட்டுக்கு வாருங்கள் எனக் கூற வேண்டியது தானே??. என்று கூறினார்.

நாட்டு நாய்கள்தான் தெருநாய்களாகிவிட்டன

கமல்ஹாசன் அவர்கள் கூறியது போல, கழுதை, சிட்டுக் குருவி, வண்ணத்துப் பூச்சிகள் போன்றவை அழிவின் விளிம்பிற்கு சென்று விட்டது. நான் எந்த அழிவிற்கும் கவலைப்படவில்லை. நாம் சக மனிதன் சாவையே சகித்துக் கொண்டு தான் செல்கிறோம். நாயை முற்றிலுமாக ஒழிப்பதால், எலிகள் பெருகும், பிளேக் நோய்கள் பெருகக் கூடிய ஆபத்து இருக்கிறது. எதையும் ஒரு சம நிலையில் வைக்க வேண்டும். இதற்காக மாநகராட்சி முறையாக நாய்களை பராமரித்து தடுப்பூசி செலுத்த வேண்டும்.

நீங்கள் அதைத் தெரு நாய் எனக் கூறுகிறீர்கள், ஆனால் அது தான் நம்முடைய வீட்டு நாய். நாம் வெளிநாடுகளில் இருக்கக் கூடிய உயர் தர நாய்களை வீட்டிற்குள் கொண்டு வந்ததால் இவைகள் தெரு நாய்கள் ஆகிவிட்டது. செங்கோட்டையன் தொடர்பான கேள்விக்கு இது மற்ற கட்சியின் பிரச்சனைகள் அவர்களுக்குள் இருக்கும் பிரச்சனையை அவர்கள் தான் சரி செய்து கொள்ள வேண்டும். அதை நாம் பேச வேண்டிய அவசியம் இல்லை.

மன்னர் ஆட்சியின் தொடக்கமே காங்கிரஸ் தான்

தமிழக வெற்றி கழகத்தை பொறுத்த வரை, பாஜக அவர்களுக்கு கொள்கை எதிரி? திமுக அரசியல் எதிரி? அப்படியானால் கொள்கைக்கும், அரசியலுக்கும் என்ன வித்தியாசம்? அப்படியானால் திமுகவும், பாஜகவும் உங்களுக்கு எதிரி என்றால், தமிழக வெற்றி கழகம் காங்கிரசையும், அதிமுகவையும் புனித படுத்துகிறதா?? கச்சத் தீவை திருப்பி எடுத்து விடுங்கள் என மோடியிடம் பேசுகிறீர்கள். கச்சத்தீவை முதலில் தாரை வார்த்தவர்கள் யார்?? மோடியிடம் ஒரு கிளாஸ் மெட் கிட்ட பேசுவது போல் நீட்டை எடுத்து விடுங்கள் என கூறுகிறீர்கள். 

ஆனால் அந்த நீட்டை கொண்டு வந்தது யார்? இவைகளை எல்லாம் கொண்டு வந்ததே காங்கிரஸ் கட்சி தான். இங்கு இந்தியை திணித்தது, காவிரி நதி நீரை பறித்தது, கச்சத்தீவை கொடுத்தது, அணு உலை திணித்தது, ஸ்டெர்லைட்டை நட்டது, மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டது, கல்வியை பொதுப்பட்டிகளுக்கு கொண்டு சென்றது, மருத்துவ உரிமைகள் பறித்தது என அனைத்தும் செய்தது காங்கிரஸ் தான். இங்கு நீங்கள் அதை புனிதப்படுத்தும் வேலையை செய்து கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் காங்கிரசை எதுவுமே சொல்லவில்லை என்றால் அது குற்றமற்ற கட்சியா?? மன்னர் ஆட்சியின் தொடக்கமே காங்கிரஸ் தான் என சீமான் விமர்சித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனி நீதிபதி உத்தரவால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!
நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்