
Goods and service tax : ஜிஎஸ்டி வரி விதிப்பால் இந்திய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. அப்போது தற்போது நடைமுறையில் உள்ள 5 %, 12 %, 18 % மற்றும் 28 சதவீதம் ஆகிய ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைகள் மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன் படி ஜிஎஸ்டியில் 12 சதவீதம், 28 சதவீதம் என்ற இரு வரிகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு பதிலாக 5 சதவீதம், 18 சதவீத வரிகள் மட்டுமே இனி வரும் நாட்களில் நடைமுறையில் தொடர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரி விதிப்பால் இந்திய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. அப்போது தற்போது நடைமுறையில் உள்ள 5 %, 12 %, 18 % மற்றும் 28 சதவீதம் ஆகிய ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைகள் மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன் படி ஜிஎஸ்டியில் 12 சதவீதம், 28 சதவீதம் என்ற இரு வரிகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு பதிலாக 5 சதவீதம், 18 சதவீத வரிகள் மட்டுமே இனி வரும் நாட்களில் நடைமுறையில் தொடர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக உணவு பொருட்கள் முதல் வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் விலை குறையவுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஜிஎஸ்டி வரி குறைப்பு தொடர்பாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பாராட்டியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,ஜிஎஸ்டி மாற்றங்களை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் 8 ஆண்டுகள் கழித்து தவறுகளை உணர்ந்த அரசை பாராட்டுகிறேன். 8 ஆண்டுகளுக்கு முன்னாள் 1. 7.2007 -ல் இந்த சட்டத்தை அமல்படுத்தும்போதே இது தவறு இது போன்ற பல்வேறு வரி விகிதங்களை வைக்காதீர்கள் என்று அறிவுறுத்தினோம். தலைமை பொருளாதார ஆலோசகர் அர்ஜுன் சுப்பிரமணியம் இது தவறு என அறிவுறுத்தினார்.
நிதியமைச்சரோ மற்ற அமைச்சர்களோ சொல்வதைக் கேட்கவில்லை. இது குறித்து நாடாளுமன்றத்தில் பலமுறை பேசியுள்ளோம். பல தலைவர்களும் பொருளாதார நிபுணர்களும் தவறுகளை திருத்த வேண்டும் என சொன்னார்கள். இப்போதாவது இதை உணர்ந்து தவறுகளை திருத்தியதற்காக நான் நன்றி சொல்கிறேன். 8 ஆண்டுகள் நடுத்தர மக்களை, ஏழை மக்களை கசக்கிப் பிழிந்தனர். 12% 18% இருந்ததை 5% மாக குறைத்துள்ளதாக கூறி உள்ளார்கள்.
இத்தனை ஆண்டுகளாக 18 சதவீதம் அதே மக்கள் தானே தந்தார்கள். இப்போது அது பொருத்தம் என்றால் போன வருடம் இதற்கு மூன்று வருடங்களுக்கு முன்பு எல்லாம் பொருந்தாத என கேள்வி எழுப்பினார். மக்களை கசக்கிப் பிழிந்து மக்களின் பணத்தை எல்லாம் வாரியாக வசூல் செய்து இப்போதாவது மனம் திருந்தி இந்த வரி விகிதங்களை குறைத்து உள்ளார்கள் அதற்காக நான் பாராட்டுகிறேன் என்றார்.