ஜெயலலிதா தனியாக கட்சி தொடங்கியிருந்தால் வெற்றி பெற்றிருக்குமா என பார்க்க வேண்டும். எம்ஜிஆர் கட்டமைத்த கட்சி, எம்ஜிஆரே அரசியலில் கட்சித் தொடங்க பயந்தார். மீண்டும் திமுகவில் சேர்த்து விட பல முயற்சிகளை எடுத்தார்கள் என சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், பட்டியிலின இளைஞர்கள் தாக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், திருநெல்வேலியில் என்றும் சாதியை தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. சாதிய படுகொலைகள் திருநெல்வேலியில் தொடர்ந்து அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனை ஒழிக்க வேண்டும் என்றால் கடும் சட்டங்கள் மட்டுமே தேவைப்படும் என கூறினார். .மார்க்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஆர்.என்.ரவி மறுத்தது குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், அடிப்படையில் ஆளுநர் ரவி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர். சாவர்கர் என்ற கோழையை பற்றி பேசும் கூட்டத்திடம் சங்கரய்யாவை பற்றி பேசினால் அவருக்கு எப்படி தெரியும்.
இந்த பட்டத்தை கொடுத்து என்ன பெருமையை தேடி கொடுத்திவிடப்போகிறார்கள். பல கோடி இளைஞர்கள் மக்கள் மனதில் வாழும் சங்கரய்யாவுக்கு இதைவிட என்ன பெருமை வேண்டும் என தெரிவித்தார். நடிகர் விஜய அரசியல் வருவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர், நடிகர் விஜய் நிலைப்பாட்டை எடுக்கும்போது பேச வேண்டும். அவர் என்ன கொள்கையை எடுத்து வைக்கிறார் என்று தெரியாமல் எந்த கருத்தையும் சொல்ல முடியாது. பாஜகவை ஆதரிக்கும் முடிவை விஜய் எடுக்கமாட்டார். விஜய் நீங்கள் நினைப்பது போல் இல்லை, அவர் வரும்போது சரியான முடிவை எடுப்பார் என கூறினார்.
ஜெயலலிதா தனியாக கட்சி தொடங்கியிருந்தால் வெற்றி பெற்றிருக்க முடியுமா என பார்க்க வேண்டும். எம்ஜிஆர் கட்டமைத்த கட்சி, எம்ஜிஆரே அரசியலில் கட்சித் தொடங்க பயந்தார். மீண்டும் திமுகவில் சேர்த்து விட பல முயற்ச்சிகளை எடுத்தார்கள். எம்ஜிஆரை பார்த்து என்டிஆர் தொடங்கினார். ஆனால் சிரஞ்சீவி, பவன் கல்யாணால் முடியவில்லை. விஜயகாந்த் வலிமையாக இருந்தார்.
ஆனால் தனித்து நிற்காமல் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்ததால் தான் சரிந்துவிட்டது. நின்று சண்டை செய்ய வேண்டும். கட்சி தொடங்கியதுமே அதிகாரத்துக்கு வர முடியாது என கூறினார். நாம் தமிழர் கட்சி யாருடன் கூட்டணி என எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தவர், எதிர்காலத்தில் நான் யாரோடும் கூட்டணி இல்லை, என்னோடு யார் கூட்டணியில் வருவார்கள் என்று பார்க்கின்றேன்.
நான் தத்துவத்தை நம்பி தனித்துவத்தோடு நிற்கின்றேன். கோட்பாடுகளை நம்பி நிற்கின்றேன். நான் கட்டிடத்திற்கு வெள்ளை அடிக்க வரவில்லை இந்த கட்டிடத்தை எடுத்து விட்டு வேறு கட்டிடம் கட்ட வந்துள்ள புரட்சியாளர் நாங்கள் என தெரிவித்தார். எங்கள் கோட்பாடு பிடித்து யார் வந்தாலும் ஏற்ப்போம் என தெரிவித்தார். நடிகை விஜயலட்சுமியின் தொடர் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்தவர், விஜயலட்சுமியால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, இதனை ஊடகங்கள் தான் பேசிக் கொண்டே உள்ளது. என்னையை ஏமாற்றி விட்டு போய் அந்த பெண் வேறொருவரை கல்யாணம் செய்து குழந்தை பெற்றது என நான் கூறினால். என்னை செருப்பால் அடிக்க மாட்டீங்க..
நீங்கள் தான் அழுக்கை ரசித்து கொண்டிருக்கீங்கள். குப்பையை தோண்டி கொண்டு சீமானை கேவலப்படுத்தினால் ஊடகங்கள் ரசிக்கின்றது. எனக்கு திருமணம் ஆகிவிட்டது மனைவியோடு இரண்டு குழந்தைகளோடு நான் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் உங்களுக்கு என்ன தான் தேவைப்படுகிறது என விஜயலட்சுமி நோக்கி சீமான் கேள்வி எழுப்பினார்.