சென்னையில் தயார் நிலையில் 169 நிவாரண முகாம்கள்; அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்

By Velmurugan s  |  First Published Nov 2, 2023, 2:52 PM IST

சென்னை மாநகராட்சி சார்பாக 169 நிவாரண முகாம்கள் தயாராக உள்ளதாக பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 


சென்னை எழிலகத்தில் உள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் வருவாய்  மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த மாதம் 21ம் தேதி முதல் தமிழ்நாட்டில் வடக்கு பருவமழை தூங்கி உள்ளது. முதலமைச்சர் இதை எதிர்கொள்வதற்கு வசதியாக செப்டம்பர் 19ம் தேதி ஒரு ஆய்வு கூட்டம் நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு உரிய பணியை குறித்து அறிவித்தார்கள்.

வருகின்ற வடக்கு கிழக்கு பருவமழைக்காக செய்ய வேண்டிய அனைத்து பணியையும் தயார் நிலையில் செய்து வருகிறோம். ஏற்கனவே பெய்த மழையை விட 43 சதவீதம் குறைவாக தான் மழை பெய்துள்ளது. இன்றைக்கு மழை பெய்ய துவங்கி உள்ளது. இன்றைக்கு கடற்கரை பகுதியில் மட்டுமே மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

வாக்காளர் பட்டியலில் குளறுபடி; கள்ள ஓட்டு போட திமுகவினர் தயாராக உள்ளனர் - விஜயபாஸ்கர் பரபரப்பு குற்றச்சாட்டு

எஸ் பி ஆர் எஸ், என் டி ஆர் எஸ்  400 பேர் தயார் நிலையில் உள்ளார்கள். எங்கே தேவைப்படுகிறதோ அங்கு செல்ல தயாராக உள்ளார்கள். சென்னையை பொறுத்தவரை கார்ப்பரேஷன் அதிகாரிகள் இரவு பகல் பாராமல் பணியை செய்து வருகிறார்கள். பொதுவாக எதிர்பார்த்த அளவு குறைவாக தான் மழை பெய்துள்ளது.  ஒரு மாதங்களில் எப்படி இருக்கும் என்று பார்த்து அதற்கு ஏற்ப பணிகளை செய்து வருகிறோம்.  அதேபோல் சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் தேங்காமல் இருக்க பணிகளை செய்து வருகிறோம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

சென்னை மாநகராட்சி சார்பாக 169 நிவாரண முகாம்கள் தயாராக இருக்கிறது,.  260 ராட்சத பம்புகள் தாயார் நிலையில் வைத்திருக்கிறோம். கடலோரத்தில் இருக்கும் மீனவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு வேண்டிய தகவலை கூறி இருக்கிறோம். தற்போது வரை எந்த பாதிப்பும் இல்லை. மேலும் பாதிப்பு வராமல் பார்த்துக் கொள்வோம்  என கூறினார். 

ஓடும் ரயிலில் பிரசவ வலி; மருத்துவர்களாக அவதாரம் எடுத்த பெண் பயணிகள் - காட்பாடியில் திக் திக் நிமிடங்கள்

தொடர்ந்து பேசிய அமைச்சர், மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கமும் சேர்ந்து பொதுமக்களுக்கு அலர்ட் கொடுக்கும் திட்டத்துக்கான சோதனை நடந்தது அது வெற்றி அடைந்துள்ளது. தேவைப்படும் பொழுது அது பொதுமக்களுக்காக பயன்படுத்தப்படும் என கூறினார்.

click me!