புதிய வேக வரம்புகள் நவம்பர் 4ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் அமலுக்கு வரும் என்றும் சென்னை பெருநகர காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வரும் சனிக்கிழமை (நவம்பர் 4ஆம் தேதி) முதல் வாகனங்களுக்கு புதிய வேக கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரவுள்ளன. இதனை முன்னிட்டு புதிய வேகக்கட்டுப்பாடு பற்றிய அறிவிப்பை சென்னை பெருநகர காவல் ஆணையரகம் வெளியிட்டுள்ளது.
இருச்சக்கர வாகனங்கள் அதிகபட்சமாக 50 கி.மீ வேகத்தில்தான் பயணிக்கலாம். மூன்று சக்கர வாகனங்கள் அதிகபட்சமாக 40 கி.மீ வேகத்துக்கு மேல் செல்லக்கூடாது. குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வாகனங்களும் 30 கி.மீ வேகத்திற்குள் மட்டுமே வாகனத்தை இயக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியர்கள் ஹமாஸுக்கு எதிராக நிற்க வேண்டும்! ஹமாஸ் தலைவரின் மகன் மொசாப் கோரிக்கை
நிர்ணயம் செய்யப்பட்டுள்ள புதிய வேக வரம்புகள் நவம்பர் 4ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் அமலுக்கு வரும் என்றும் சென்னை பெருநகர காவல் ஆணையரகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் 2022ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்துகள் குறித்த அறிக்கையை திங்கட்கிழமை வெளியிட்டது. அதில் தமிழகத்தில்தான் சாலை விபத்துகள் அதிக எண்ணிக்கையில் நடப்பது தெரியவந்துள்ளது. இதன் எதிரொலியாக சென்னையில் வாகனங்களுக்கு புதிய வேக கட்டுப்பாட்டு விதிக்கும் அறிவிப்பை காவல்துறை வெளியிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.