சென்னை கோயம்பேட்டில் இருந்து பயணிகளுடன் வள்ளலார் நகரை நோக்கி 48 சி என்ற தடம் எண் கொண்ட பேருந்து தங்கச்சாலை மேம்பாலம் வந்து கொண்டிருந்தது.
சென்னை தங்கசாலை மேம்பாலம் அருகே மாநகர பேருந்தின் பிரேக்கில் பழுது ஏற்பட்டதால், பிற வாகனங்கள் மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் சாலை தடுப்பில் மோதி பேருந்தை நிறுத்தினார்.
சென்னையில் இயக்கப்படும் மாநகர பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படாத காரணத்தால் அவ்வப்போது விபத்தில் சிக்குவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் இருந்து பயணிகளுடன் வள்ளலார் நகரை நோக்கி 48 சி என்ற தடம் எண் கொண்ட பேருந்து தங்கச்சாலை மேம்பாலம் வந்து கொண்டிருந்தது.
இதையும் படிங்க;- அடேங்கப்பா.. அக்டோபர் மாதத்தில் மட்டும் இத்தனை லட்சம் பேர் மெட்ரோவில் பயணமா?
அப்போது திடீரென பிரேக்கில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பேருந்தின் ஓட்டுநர் பிற வாகனங்கள் மீது மோதாமல் இருப்பதற்காக, சாலை தடுப்பில் மோதி பேருந்தை நிறுத்தியுள்ளார். இதில் பயணிகள் 5 பேர் லேசான காயமடைந்தனர். நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் பெரியளவில் காயங்கள் ஏற்படவில்லை.பேருந்தின் முன் பகுதி கண்ணாடிகள் உடைந்தது பயணிகள் மீது விழுந்ததில் பதறி போன பயணிகள் முண்டியடித்துக் கொண்டு பேருந்தில் இருந்து கீழே இறங்கினர்.
இதையும் படிங்க;- கல்குவாரி ஏலம் தொடர்பாக மோதல்.. முதல்வர் போட்ட உத்தரவு? திமுகவினர் 12 பேர் இரவோடு இரவாக கைது.!
இந்த விபத்து தொடர்பாக வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.