காவு வாங்கும் டெங்கு.. பள்ளி மாணவன் உயிரிழப்பால் அலறும் பொதுமக்கள்..!

By vinoth kumar  |  First Published Oct 31, 2023, 11:35 AM IST

டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. இதனால் இந்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின வழிகாட்டுதலின் படி டெங்கு பரவலைக் குறைக்க எல்லா மாநிலங்களும் தீவிர நடிவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


சென்னை பூந்தமல்லியில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 10ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. இதனால் இந்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின வழிகாட்டுதலின் படி டெங்கு பரவலைக் குறைக்க எல்லா மாநிலங்களும் தீவிர நடிவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த நில நாட்களாக தமிழகத்தில் டெங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்தது. சுமார் 500 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த டெங்கு பாதிப்பு குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். 

Tap to resize

Latest Videos

இந்நிலையில், சென்னை பூந்தமல்லி கபாலி தெருவை சேர்ந்தவர் ராஜ் பாலாஜி(15). இவர் குமணன்சாவடியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவருக்கு ரத்த பரிசோதனை மேற்கொண்டதில் டெங்கு இருப்பது உறுதியானது. இதனையடுத்து பூந்தமல்லியின் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

பின்னர் மேல்சிகிச்சைக்காக போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில் ராஜ் பாலாஜிக்கு டெங்கு காய்ச்சல் சற்று குறைந்து வந்த நிலையில் உடலில் உப்பு அதிகமாக இருந்ததால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.

click me!