சென்னை பல்லாவரம் நோக்கி ஜிஎஸ்டி சாலையில் அதிவேகமாக பிஎம்டபிள்யூ கார் வந்துக்கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடியது.
சென்னை விமான நிலையம் அருகே கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் மோதியதில் 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை பல்லாவரம் நோக்கி ஜிஎஸ்டி சாலையில் அதிவேகமாக பிஎம்டபிள்யூ கார் வந்துக்கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடியது. அப்போது சாலையோரம் நின்று கொண்டிருந்த கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் மற்றும் பேருந்துக்காக நின்றுக்கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதியது. இந்த விபத்தில் 7 பேர் படுகாயமடைந்தனர்.
இதையும் படிங்க;- தங்காளியை போன்று வெங்காயத்தின் விலையும் உயரப்போகுதாம்.. விலையை கேட்டு கண்ணீர் வரப்போகுதாம்.. அலறும் ராமதாஸ்.!
உடனே படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சொகுசு கார் ஓட்டுநரை கைது செய்தனர்.
இதையும் படிங்க;- கர்ப்பிணி நாயை பலாத்காரம் செய்த காமக்கொடூரன்.. அக்கம் பக்கத்தினர் பார்த்ததால் என்ன செய்தார் தெரியுமா?
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கேரளாவை சேர்ந்த ரஞ்சித் என்பவர் அதிவேகமாக காரை ஓட்டியதால் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் முதன்முறையாக சொகுசு காரை ரஞ்சித் இயக்கியதால் விபத்து என தெரியவந்துள்ளது.