தீபாவளி விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து நாகர்கோவில் வரை சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தீபாவளிப் பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் வெளியீடுகளுக்குச் செல்லும் பயணிகளுக்காக சிறப்பு ரயில்களை ரயில்வே இயக்குகிறது. அந்த வகையில் சென்னையில் இருந்து நாகர்கோவில் வரை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில் நாகர்கோவில் மற்றும் சென்னை இடையே நான்கு நாட்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
undefined
நாகர்கோவில் - தாம்பரம் இடையே நவம்பர் 5,12,19,26 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். இந்தச் சிறப்பு ரயில் (06012) நாகர்கோவிலில் இருந்து மாலை 4.35 மணிக்குப் புறப்படும். மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரத்தை அடையும்.
சென்னையில் புதிய வேகக் கட்டுப்பாடு! நவ. 4 முதல் ஓவர் ஸ்பீடில் போகும் வாகனங்களுக்கு ஆப்புதான்!
இதேபோல நவம்பர் 6,13,20,27 ஆகிய தேதிகளில் தாம்பரம் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் (06011) இயக்கப்படும். தாம்பரத்தில் காலை 8.05 மணிக்கு புறப்படும் இந்த ரயில் அன்று இரவு 8.45 மணிக்கு நாகர்கோவிலைச் சென்றனையும்.
தாம்பரம் - நாகர்கோவில் இடையே இயக்கப்பட உள்ள இந்த சிறப்பு ரயில் திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில் நின்று பயணிக்கும். இந்த ரயிலில் பயணிக்க விரும்புவோர் நவம்பர் 2ஆம் தேதி (நாளை) காலை 8 மணி முதல் முன்பதிவு செய்யலாம்.
உங்க மொபைல் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? தெரிந்துகொள்வது எப்படி? வல்லுநர்கள் கொடுக்கும் ஐடியா