
Seeman criticizes DMK for being BJP A team : தமிழக அரசியல் களம் தேர்தலுக்காக தயாராகி வரும் நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை ஒரு புறமும், கூட்டணியை உருவாக்க கட்சிகளுக்கு அழைப்பு மறு பக்கமும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விழுப்புரத்தில் நாம் தமிழர் கட்சி நிகழ்வில் கலந்து கொண்ட ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுக- அதிமுக கட்சிகளை கடுமையாக விமர்சித்துள்ளார். ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டோம் என்று கூறுவது கர்நாடகாவில் பாஜகவும், காங்கிரஸ் தான், முல்லைபெரியாறு, தமிழின் வளர்ச்சிக்காக காங்கிரஸ் கட்சிகள் தான் நிற்பார்களாக அல்லது திராவிட கட்சிகள் தான் நிற்பார்களா என கேள்வி எழுப்பினார்.
இந்திய ஒற்றுமைக்காக போராடும் காங்கிரசும், பாஜகவும் கர்நாடாக நீர் தராத போது இந்திய இறையாண்மை ஒருமைப்பாடு இங்கு காக்கப்படுகிறதா தண்ணீர் என்று கேட்கும் போது ஒருசொட்டு தண்ணீர் கொடுகாத அதிகாரம் யார் கொடுத்தா என்றும் அவன் அவன் வளம் அவனுக்கு என்று கூறும்போது என் நாட்டின் வளம் மற்றவர்களுக்கா என தெரிவித்தார்.
எடப்பாடி பழனிச்சாமி கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் தேர்தலுக்கு 8 மாதங்கள் உள்ளன பொறுத்திருந்து பாருங்கள் என தெரிவித்தார். பாஜகவை எதிர்க்கிறோம் என திமுக நாடகம் போடுகிறார்கள் ஆனால் ஜெயலலிதா இருந்த போது நடைபெறாத ஆர் ஆர் எஸ் எஸ் பேரணி திமுக அட்சியில் தடையின்றி பேரணி நடைபெறுகிறது. அதிமுக தற்போது பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. மறைமுகமாக பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நூற்றாண்டு விழாவிற்கு நாணயம் வெளியிட்ட போது பாஜக மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார.
ஆனால் ஜெயலலிதாவிற்கு நாணயம் வெளியிடும் பொழுது பாஜகவினர் கலந்து கொள்ளவில்லை. அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த போது கூட வரவில்லை. அதையே திமுக பெருமையாக சொன்னது. கூட்டணி வைத்திருந்த போதும் உங்கள் தலைவியின் நாணய வெளியீட்டிற்கு மத்திய அமைச்சர்கள் வரவில்லை. ஆனால் எங்களுடைய தலைவர் நாளை வெளியிட்டு விழாவிற்கு மத்திய அரசு சார்பாக மூத்த அமைச்சர்கள்கலந்து கொண்டு இருப்பதாக தெரிவித்தனர்.
அப்படி என்றால் உண்மையிலேயே பாஜகவுடன் கூட்டணி யார்.? ஐயா கருணாநிதி உடன் நினைவிடத்தில் பாஜக அமைச்சர் கும்பிட்டு மரியாதை செலுத்தினார்கள். மூன்று முறை நிதி ஆயோ கூட்டத்திற்கு செல்ல மாட்டேன் என கூறிய ஸ்டாலின், ஒரே ஒரு முறை ED வந்ததும் இதோ ஓடி வருகிறேன் மோடி என போய் நின்றது யார் என கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் திமுக- அதிமுக ஆகிய இரண்டு கட்சியின் நடித்துக் கொண்டுள்ளார்கள். நான் இருக்கிற வரை தமிழகத்தில் பாஜக வளராது வெல்லாது பிஜேபி காங்கிரஸின் கோட்பாடு தமிழகத்தில் எங்கே பொருந்துகிறது, அப்புறம் எதற்கு இந்த கட்சி தேவைப்படுகிறது. என் மொழிக்கு ஆதரவாக பேசுமா.? இனத்திற்கு ஆதரவாக பேசுமா?
கலைக்கு ஆதரவாக பேசுமா என் பண்பாட்டிற்கு ஆதவராக பேசுமா என கேள்வி எழுப்பியவர் இதைப் பற்றியும் கவலைப்படாத கட்சி எதற்கு தமிழகத்திற்கு என கூறினார். தமிழகத்தை பாஜகவின் தேவை ஏற்படாது என ஸ்டாலின் சொல்லியிருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஆட்சியை கொடுத்துக் கொண்டிருக்கிறேன் நான் இருக்கும் வரை பாஜக வராது என்று தானே சொல்ல வேண்டும். வீட்டில் வாட்ச்மேன் எதற்காக போடப்படுகிறது திருடன் வருவதற்கு முன்பாக திருடனை பிடிப்பதற்கு, வந்த பிறகு விரித்து பிடிப்பதற்கு அல்ல திருடன் வந்துருவான், ஜன்னலை பூட்டுங்கள், இரண்டு பூட்டு போட்டு பூட்டுங்கள் என கூறுவது ஏன்.? பிஜேபியின் பி டீம் என என்னை குறிப்பிடுகிறீர்கள் அப்படியென்றால் ஏ டீம் யார் அது திமுக தான் என சீமான் விமர்சித்தார்.