தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அறிவித்த சீமான்!

By SG Balan  |  First Published Mar 10, 2024, 4:30 PM IST

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ளார்.


தமிழகத்தில் அடுத்த மாதம்  நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியினர் தமிழக மற்றும் புதுச்சேரி மாநிலம் உள்ளடக்கிய 40 தொகுதிகளில் வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை  ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்

Tap to resize

Latest Videos

இந்த நிலையில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக மருத்துவர் கெளசிக் என்பவரை சீமான் அறிவித்து இருந்தார்.

எங்க போனாலும் மக்கள் எங்களைத் தான் பாராட்டுராங்க! குஷியாக போட்டோ போட்ட பிரதமர் மோடி!

இந்த நிலையில் விருதுநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் அருண் ஜெயசீலன் கலந்து கொண்டு மருத்துவர் கௌசிக் என்பவரை நாம் தமிழர் கட்சியின் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராக அறிமுகப்படுத்தினார்.

மேலும் வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கு விருதுநகர் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளில் இருந்து நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்

திமுக ஆட்சி குரங்கு கையில் பூமாலை கொடுத்த கதை போல உள்ளது: மத்திய அமைச்சர் எல். முருகன்

click me!