மாண்டஸ் புயல் எச்சரிக்கை… நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… எந்ததெந்த மாவட்டங்கள்?

By Narendran SFirst Published Dec 8, 2022, 4:47 PM IST
Highlights

மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக தமிழகத்தின் 24 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக தமிழகத்தின் 24 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறியுள்ளது. இதற்கு மாண்டஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் தற்போது தென்மேற்கு வங்கக்கடலில் காரைக்காலில் இருந்து 500 கிமீ தொலைவில் உள்ளது. மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வந்த இந்தப் புயல் தற்போது 6 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.

இதையும் படிங்க: மாண்டஸ் புயல் நாளை எந்த இடத்தில் கரையை கடக்கிறது..? தமிழத்திற்கு ரெட் அலர்ட்டா.? - வானிலை மையம் தகவல்

இந்த நிலையில் இந்த மாண்டஸ் புயல் புதுவை ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டிசம்பர் 09 நள்ளிரவில் மணிக்கு 65-75 கிமீ வேகத்தில் மணிக்கு 85 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் கடலோர பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: அம்பேத்கர் சிலைக்கு காவியா.? தமிழ்நாடு முழுவதும் 12ம் தேதி ஆர்ப்பாட்டம் - திருமாவளவன் அறிவிப்பு !

இதன் காரணமாக தமிழகத்தின் 24 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கடலூர், திருப்பத்தூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சேலம், நாமக்கல், தருமபுரி, திருவண்ணாமலை, நாகை, பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய 24 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

click me!