பள்ளி பேருந்து ஓட்டை வழியே சாலையில் விழுந்து சிறுமி உயிரிழந்த வழக்கு.. நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி தீர்ப்பு.!

By vinoth kumarFirst Published Jan 26, 2023, 9:01 AM IST
Highlights

2012-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி பள்ளி முடிந்து மாணவி ஸ்ருதி பள்ளி பேருந்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, பேருந்தில் இருந்த ஓட்டை வழியே சிறுமி ஸ்ருதி கீழே சாலையில் விழுந்து அந்த பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கிய பரிதாபமாக உயிரிழந்தார்.

தனியார் பள்ளிப் பேருந்தின் ஓட்டை வழியே விழுந்து சிறுமி ஸ்ருதி உயிரிழந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்து செங்கல்பட்டு கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

கடந்த 2012-ம் ஆண்டு தாம்பரத்தை அடுத்த சேலையூரில் உள்ள தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சிறுமி ஸ்ருதி 2-ம் வகுப்பு படித்து வந்தார். அந்த பள்ளிக்குச் சொந்தமான பேருந்தில் சிறுமி பள்ளிக்கு செல்வது வழக்கம். இந்நிலையில், 2012-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி பள்ளி முடிந்து மாணவி ஸ்ருதி பள்ளி பேருந்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். 

இதையும் படிங்க;- என்கிட்ட சும்மா சிக்குனு அழகான பொண்ணுங்க இருக்கு வரியா.. உல்லாசத்துக்கு அழைத்த புரோக்கர்.. இளைஞர் செய்த செயல்

அப்போது, பேருந்தில் இருந்த ஓட்டை வழியே சிறுமி ஸ்ருதி கீழே சாலையில் விழுந்து அந்த பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கிய பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. சிறுமி உயிரிழப்புக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதையும் படிங்க;-  லவ் பண்றேன்னு சொல்லிட்டு.. உன்னுடைய நண்பர்களுக்கு என்னை விருந்தாகிட்டியே.. கதறிய பள்ளி மாணவி..!

இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், தனியார் பள்ளியின் தாளாளர், மோட்டார் வாகன ஆய்வாளர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு செங்கல்பட்டு கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில், தனியார் பள்ளிப் பேருந்து ஓட்டை வழியே சிறுமி விழுந்து பலியான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 8 பேரையும் நீதிபதி காயத்ரி விடுதலை செய்தார். 

click me!