அரசுப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்படும் என்பது பொய்.. அமைச்சர் அன்பில் மகேஷ்

By Thanalakshmi VFirst Published Oct 8, 2022, 3:51 PM IST
Highlights

அரசுப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்படுகிறது என்பது பொய் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
 

அரசுப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்படுகிறது என்பது பொய் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அறக்கட்டளை ஆண்டு விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று கலந்துக் கொண்டார். 

மேலும் படிக்க:மது அருந்திவிட்டு அரசு பேருந்தை இயக்கினால் ஆப்பு தான்.. ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்துறை எச்சரிக்கை.!

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், போதைப்பொருட்கள் இல்லாத பள்ளி வளாகங்களாக பள்ளிகள் மாற வேண்டும். மாணவர்களிடையே போதை பொருள் பழக்கத்தை ஒழிப்பது நமது கடைமை ஆகும். அதற்காக கொண்டு வரப்பட்டுள்ள சிற்பி திட்டம் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். 

மேலும் படிக்க:நெல்லையில் பதற்றம்; பேருந்தை கொளுத்திய ராக்கெட் ராஜா ஆதரவாளர்கள்?

தமிழகத்தில் நீட் விலக்கு ஏற்படும் வரை மாணவர்களுக்கு நீர் தேர்வு பயிற்சி தொடரும். அரசுப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்படுகிறது என்பது பொய் தகவல் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

 

click me!