உஷார் !! இன்று 15 மாவட்டங்களில் கனமழை.. எந்தெந்த பகுதிகளில் மழை.? வானிலை அப்டேட்

Published : Oct 08, 2022, 03:11 PM IST
உஷார் !! இன்று 15 மாவட்டங்களில் கனமழை.. எந்தெந்த பகுதிகளில் மழை.?  வானிலை அப்டேட்

சுருக்கம்

தமிழகத்தில் இன்று நீலகிரி,ஈரோடு உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   

இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தெற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ நிலவும்‌ வளிமண்டல மேலடுக்கு சுழற்சி‌ காரணமாக,

08.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, ஈரோடு, நாமக்கல்‌, சேலம்‌, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்‌, வேலூர்‌, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம்‌, கள்ளக்குறிச்சி, கடலூர்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

மேலும் படிக்க:உஷார் !! சென்னையில் கனமழை.. இன்று 12 மாவட்டங்களில் கனமழை.. வானிலை அப்டேட்..

09.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி மாவட்டத்‌தில் ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்‌, வேலூர்‌, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர்‌, சேலம்‌, ஈரோடு, நாமக்கல்‌, கரூர்‌, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, திண்டுக்கல்‌, தேனி, திருச்சி, பெரம்பலூர்‌, அரியலூர்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்யவாய்ப்புள்ளது.

10.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்‌, ராணிப்பேட்டை, வேலூர்‌, திருவண்ணாமலை, விழுப்புரம்‌, கடலூர்‌, கள்ளக்குறிச்சி, நாமக்கல்‌, சேலம்‌, ஈரோடு, கரூர்‌, நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, திண்டுக்கல்‌, தேனி, மதுரை, சிவகங்கை, திருச்சி, பெரம்பலூர்‌, அரியலூர்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை
பெய்யவாய்ப்புள்ளது.

மேலும் படிக்க:தமிழகத்தில் 5 நாட்கள் கனமழை.. இன்று எந்தெந்த பகுதியில் கனமழை..? வானிலை அப்டேட்

11.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, ஈரோடு, நாமக்கல்‌, சேலம்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்‌, வேலூர்‌, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்‌ மற்றும்‌ கடலார்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

12.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்‌சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மேலும் படிக்க:சென்னையில் எப்பேர்ப்பட்ட மழை வந்தாலும் சமாளிக்கும் வகையில் வடிகால் பணிகள்.. முதலமைச்சர் திட்டவட்டம்

மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!
திமுகவினர் என்னை இழிவாக பேசினார்கள்..! விஜய் நான் உங்கள் ரசிகன் என்றார்..! நாஞ்சில் சம்பத் பேட்டி!