நெல்லையில் பதற்றம்; பேருந்தை கொளுத்திய ராக்கெட் ராஜா ஆதரவாளர்கள்?

By Dinesh TG  |  First Published Oct 8, 2022, 2:50 PM IST

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ராக்கெட் ராஜா நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது ஆதரவாளர்கள் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினி பேருந்துக்கு தீ வைத்ததால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
 


திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை அடுத்த ஆணைகுடி பகுதியைச் சேர்ந்த ராக்கெட் ராஜா கொலை வழக்கு ஒன்றில் நேற்று திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட ராக்கெட் ராஜா நேற்றைய தினமே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், திசையன்விளை அடுத்த நவ்வலாயில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே சாலை ஓரம் மினி பேருந்து ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 

திருக்குறள் பற்றி ஆளுநருக்கு ஆழ்ந்த ஞானம் கிடையாது - வைகோ குற்றச்சாட்டு

Tap to resize

Latest Videos

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சிலர் அந்த மினி பேருந்தினுள் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளனர். இதனை கவனித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக பேருந்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இல்லாததால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. இருப்பினும் பேருந்தின் இருக்கைகள் மற்றும் சில பாகங்கள் தீயில் கருகி சேதமாகின. 

பனங்காட்டு படை கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜா அதிரடி கைது

இது குறித்து உவரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் கொலை வழக்கில் நேற்று கைதான பிரபல ரவுடி ராக்கெட் ராஜாவின் சொந்த ஊரான ஆணைகுடி அருகில் தான் நவ்வலடி ஊர் அமைந்திருப்பதால் ராக்கெட் ராஜாவின் கைது சம்பவத்தின் எதிரொலியாக இந்த பேருந்து தீவைப்புச் சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தொழில் முன்விரோதம் காரணமாகவும் இச்சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

click me!