நீ செத்தா யார் அழுவாங்க? சிறைக்கு தபாலில் போன புத்தகத்தைப் படித்து கதறி அழுத சசிகலா…

 
Published : Mar 28, 2017, 08:29 AM ISTUpdated : Sep 19, 2018, 03:05 AM IST
நீ செத்தா யார் அழுவாங்க? சிறைக்கு தபாலில் போன புத்தகத்தைப் படித்து கதறி அழுத சசிகலா…

சுருக்கம்

sasikala inJail

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு அவரது ஆதரவாளர் ஒருவர் அனுப்பியநீங்கள் இறந்த பின் யார் அழப் போகிறார்கள்? என்ற தலைப்பில் எழுதப்பட்ட புத்தகத்தை வாசித்து கதறி அழுததாக தகவல் வெளியாகியுள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும், அதிமுக பொதுச் செயலாளருமான சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அஹ்ரகாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவர் அங்கு பூஜை புனஸ்காரங்கள் செய்து வருவதாகவும், தொலைக்காட்சி பார்த்தல், செய்தித்தாள் வாசித்தல், தியானம் செய்தல் போன்றவற்றில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் தெரிகிறது.

இந்நிலையில் கடந்த வாரத்தில் இருந்து சசிகலாவுக்கு நூற்றுக்கணக்கான கடிதங்கள் வருவதாகவும், அவற்றில் சசிகலாவை தொண்டர்கள் பயங்கரமாக தீட்டித் தீர்த்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதனிடையே சசிகலாவின் ஆதரவாளர் ஒருவர் அவருக்கு பிரபல கனடா எழுத்தாளர் ராபின் சர்மா எழுதிய, Who will cry when you die ? என்ற ஆங்கில புத்தகத்தின் தமிழாக்கத்தை அனுப்பி வைத்துள்ளார்.

அந்த புத்தகத்தை வாசிக்கத் தொடங்கிய சசிகலா தியானக் கூடத்திற்கு சென்று கதறி  அழுததாக கூறப்படுகிறது.

நீ பிறந்த போது, நீ அழுதாய்உலகம் சிரித்தது..! ஆனால் நீ இறக்கும் போது,    பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்” என தொடங்கும் ராபின் ஷர்மாவின்  இந்த புத்தகம் சசிகலாவின் மனதைப்பாதித்ததாக கூறப்படுகிறது.

 

 

PREV
click me!

Recommended Stories

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று 5 முதல் 8 மணிநேரம் வரை மின்தடை! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!
அதிகாலையிலேயே கோர விபத்து! இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதல்! 5 பேர் சம்பவ இடத்திலேயே ப*லி