தினகரனுடன் கைகோர்த்ததன் எதிரொலி...விஜயபாஸ்கரைத் தொடர்ந்து சரத்குமார் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை...

 
Published : Apr 07, 2017, 08:44 AM ISTUpdated : Sep 19, 2018, 03:07 AM IST
தினகரனுடன் கைகோர்த்ததன் எதிரொலி...விஜயபாஸ்கரைத் தொடர்ந்து சரத்குமார் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை...

சுருக்கம்

sarathkumar raid

நடிகர் சரத்குமார் வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலை அடுத்து வருமான வரித்துறையினர் அவரது கொட்டிவாக்கம் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் வாக்களர்களுக்கு மிக அதிக அளவு பணம் பட்டுவாடா செய்யப்பட்டு வருவதாக எழுந்த புகாரையடுத்து அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

இதையடுத்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர்  விஜய பாஸ்கர் வீடு, அலுவலகம் உட்பட 30 இடங்களில் வருமான வரித்துறை இன்று சோதனை நடத்தி வருகிறது.

இந்நிலையில் சென்னை கொட்டி வாக்கத்தில் உள்ள நடிகர் சரத்குமார் வீட்டிலும் இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய நடிகர் சரத்குமார் வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலை அடுத்து இந்த ரெய்டு நடைபெறுவதாக வருமான வரித்துறையினர் தகவல்கள் வெயியிட்டுள்ளனர்.

நடிகர் சரத்குமார் அண்மையில்தான் டி.டி.வி.தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இந்நிலையில் அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

Tamil News Live today 21 December 2025: மீண்டும் வெடித்த வன்முறை.. பெண்கள் மீது தொடர் தாக்குதல்.. வங்கதேசத்தில் பரபரப்பு
டெட் தேர்வில் திருப்பம்! சிறுபான்மை பள்ளிகளுக்கு இனி அந்த கவலை இல்லை.. முதல்வர் போட்ட அதிரடி கையெழுத்து!