
சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் சோதனை… வருமான வரித்துறை அதிரடி ஆய்வு…
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜய பாஸ்கர் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 30 இடங்களில் வருமான வரித்துறையின் இன்று அதிகாலை முதல் அதிரடி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் எம்எல்ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் டாக்டர் விஜய பாஸ்கர். இவர் ஏற்கனவே ஜெயலலிதா அமைச்சரவையில் சுகாதாத்துறையை கவனித்து வந்தார்.
தற்போது மீண்டும் சுகாதாரத் துறை அமைச்சராக உள்ளார். இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் இன்று அதிகாலை முதல் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் அவருக்கு சொந்தமான புதுக்கோட்டை, திருச்சி,சென்னை உட்பட 30 இடங்களில் உள்ள அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
அமைச்சர் விஜய பாஸ்கர் முறையாக வரி செலுத்தவில்லை என்ற புகாரின் பேரில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக கூறப்பட்டாலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா எதிரொலியாகத்தான் இந்த சோதனை நடைபெறுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.