கல்வி, வேலைகளில் சிறுபான்மையினரின் இட ஒதுக்கீடு எந்த அளவு அமல்படுத்தப்பட்டுள்ளது? வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள்…

 
Published : Apr 07, 2017, 07:20 AM ISTUpdated : Sep 19, 2018, 03:07 AM IST
கல்வி, வேலைகளில் சிறுபான்மையினரின் இட ஒதுக்கீடு எந்த அளவு அமல்படுத்தப்பட்டுள்ளது? வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள்…

சுருக்கம்

Education jobs and the amount of which has been implemented in the minority of the reservation Publish White Paper

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளின் சிறுபான்மை மக்களுக்கான இட ஒதுக்கீடு எந்த அளவிற்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு இரண்டாவது மாவட்ட மாநாடு திருவாரூரில் நேற்று நடைப்பெற்றது.

இந்த மாநாட்டிற்கு மாவட்ட அமைப்பாளர் ராமசாமி தலைமை வகித்தார். இதில் மாநில அமைப்பாளர் நூர்முகமது, மாநில துணை அமைப்பாளர் லெட்சுமணன் ஆகியோர் பேசினர். மாவட்ட துணை அமைப்பாளர் அக்பர்தீன் வரவேற்றார்.

இம்மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அவை, “திருவாரூர் மாவட்டத்தில் மும்மத தலங்கள் அமைந்துள்ளதால் அடியார்கள், சுற்றுலா பயணிகள் வசதிக்காக சுற்றுலா மினி பேருந்துகளை இயக்க வேண்டும்.

சிறுபான்மை இன மக்களின் குறைகளை தீர்க்க மாவட்ட அளவிலான குறைதீர்க்கும் கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு அனைத்து மாவட்டங்களிலும் மத நல்லிணக்க குழுவை நிரந்தரமாக அமைக்க வேண்டும்.

திருவாரூர் மாவட்டத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளின் சிறுபான்மை மக்களுக்கான இட ஒதுக்கீடு எந்த அளவிற்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. 

இந்த மாநாட்டில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பைரவநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் நாகராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.

PREV
click me!

Recommended Stories

எப்போதும் திமுக எதிர்ப்பு திமுக வெறுப்பு, திமுக = விஜய் எதிர்ப்பு என்ற நிலை தான் இருக்கிறது
Tamil News Live today 21 December 2025: அமெரிக்கா போனா திரும்ப முடியாதா.? கூகுள்–ஆப்பிள் எச்சரிக்கை.. அதிர்ச்சி செய்தி