TN : "சண்டாளர்".. சாதிப்பெயரை கிண்டலாகவும் நகைச்சுவையாகும் பயன்படுத்த கூடாது - வெளியான அதிரடி அறிவிப்பு!

By Ansgar RFirst Published Jul 15, 2024, 6:56 PM IST
Highlights

Tamil Nadu : "சண்டாளர்" என்கின்ற சாதிப்பெயரை இனி பயன்படுத்தக்கூடாது என்று தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் இன்று வெளியிட்ட ஊடக அறிவிப்பில் கூறியிருக்கும் தகவல்கள் பின்வருமாறு அளிக்கப்பட்டிருக்கிறது.. 

"இந்தியாவின் சாதிய கட்டமைப்பில் ஒவ்வொரு சாதிக்கும் வெவ்வேறு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இப்பெயர்கள் சமூக மதிப்பையும், அவமதிப்பையும் சுட்டுவதாக இருக்கின்றன. தங்களுடைய சாதியின் பெயர் இழிவாக இருப்பதாக கருதுகின்ற சாதிகள், அப்பெயரை மாற்றிக் கொள்வதும், அதற்கு அரசு ஒப்புதல் கொடுத்து அரசாணை வெளியிடுவதும் தொடர்ந்து நிகழ்கின்றன". 

Latest Videos

"மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு தேவையான அடிப்படையான பொருட்களை உற்பத்தி செய்தல், பிணங்களை அடக்கம் செய்தல் போன்ற சமூக பயனுள்ள பணிகளை செய்கின்ற சமூக குழுக்களை, இழிவான பெயர்களில் அழைப்பதும். அரசியல் மேடைகளில் பிறரை வசை பாடுவதற்கு பயன்படுத்துவதும், கலை இலக்கியங்களிலும், திரைப்பட நகைச்சுவை காட்சிகளிலும், திரைப்பட பாடல்களிலும் அப்பெயர்களை பயன்படுத்துவதும் பரவலாக இருக்கின்றன". 

MK STALIN : கர்நாடக அரசிற்கு செக் வைக்க திட்டம் போட்ட ஸ்டாலின்- அனைத்து கட்சி கூட்டத்திற்கு திடீர் அழைப்பு

"இது அப்பெயர்களில் உள்ள மக்களையும் அவர்களைப் போன்ற மக்களையும் புண்படுத்தும் செயலாகும். தவிர இது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றச்செயல் என்ற எண்ணமும் பொது சமூகத்தில் இல்லை. பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989ன் படி பொதுவெளியில் பட்டியல் சாதிப்பெயர்களை இழிவான பொருளில் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும்". 

"தமிழ்நாட்டில் சில பகுதிகளிலும், இந்தியாவிலும் "சண்டாளர்" என்ற பெயரில் மக்கள் இருக்கின்றனர். தமிழ்நாட்டில் பட்டியல் சாதியினர் அட்டவணையில் இப்பெயர் 48ம் இடத்தில் உள்ளது என்பதையும் இவ்வாணையின் சுட்டிக்காட்டுகிறது. அண்மை காலங்களில் பிறரை இழிவுபடுத்தும் நோக்கில், இப்பெயர் பொதுவெளியில் சமூக ஊடகங்களில் அழுத்தமாக பேசப்படுவதை காண முடிகிறது." 

"எனவே இழிவுபடுத்தும் நோக்கத்திலோ, நகைச்சுவையாகவோ, அரசியல் மேடைகளிலோ, சண்டாளர் என்ற சொல்லை பயன்படுத்தக்கூடாது என தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் அறிவுறுத்தி இருக்கிறது. மேலும் அவ்வாறு பயன்படுத்துவோர் மீது பட்டியல் சாதியினர் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 கீழ் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அரசுக்கு, தமிழ்நாடு அரசு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆலயம் பரிந்துரைக்கிறது", என்று அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.  

காலை உணவுத் திட்டத்தில் சிறுதானிய உணவு இல்லையா? அண்ணாமலைக்கு பதில் சொன்ன தமிழக அரசு!

click me!