அரசு செலவில் அலுவலர்களை பயன்படுத்தியது, துணைவேந்தர் பதவியில் இருக்கும்போதே தனி நிறுவனம் தொடங்கியது எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் காவல்துறை ஜெகநாதனை கைது செய்திருக்கிறது.
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். விதிகளை மீறி கல்வி நிறுவனம் நடத்திய புகாரில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் பல்கலைக்கழக நிர்வாகத்தில் இது தொடர்பாக புகார் அளித்துளாளர். அந்தப் புகாரின் துணைவேந்தர் ஜெகநாதன் செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
undefined
கிரிப்டோ கரன்சி மோசடியில் 95 லட்சம் போச்சு! உங்க பணம் பத்திரமாக இருக்க இதைத் தெரிஞ்சுக்கோங்க!
சேலம் கருப்பூர் காவல்துறையினர் துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டதாக ஜெகநாதன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ஜெகநாதன் தனது கூட்டாளிகள் சிலரோடு இணைந்து பூட்டர் என்ற தனி நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறார் என்றும் புகாரில் கூறப்பட்டுள்ளது. அரசு செலவில் அலுவலர்களை பயன்படுத்தியது, துணைவேந்தர் பதவியில் இருக்கும்போதே தனி நிறுவனம் தொடங்கியது எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் காவல்துறை ஜெகநாதனை கைது செய்திருக்கிறது.
அயோத்திக்கு கடவுளின் அழைப்பு யாருக்கு? சூடுபிடிக்கும் ராமர் கோயில் திறப்பு விழா சர்ச்சை