ஈரோடு மாவட்டத்தில் குற்றவாளிகளுடன் இணைந்து பெருந்துறை காவல் ஆய்வாளர் மசூதா பேகம் நில மோசடியில் ஈடுபடுவதாக பேரூராட்சி தலைவரின் கணவர், பேரூராட்சி துணைத்தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
குற்றவாளிகளுடன் இணைந்து நில மோசடியில் ஈடுபடும் ஈரோடு மாவட்டம் பெருந்துறை காவல் ஆய்வாளர் மசூதா பேகம் மீது பெத்தாம்பாளையம் பேரூராட்சி தலைவர் பூங்கொடி மற்றும் பேரூராட்சி சார்ந்த அனைத்து வார்டு உறுப்பினர்களும் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பெதாதாம்பாளையம் பேரூராட்சியின் தலைவர் பூங்கொடியின் கணவர் மற்றும் துணைத் தலைவர் கூறுகையில், பெருந்துறை பகுதியில் நில மோசடியை தொழிலாக கொண்டுள்ள மூர்த்தி என்பவர் என் சொத்தின் மீது பொய்யான ஆவணத்தை தயாரித்து எனது கையிழுத்தையும் போலியாக போட்டு பெருந்துறை காவல் ஆய்வாளரிடம் பொய்யான புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதன் அடிப்படையில் பெருந்துறை காவல் ஆய்வாளர் மசூதா பேகம் புகாரை பற்றி எந்தவிதமான முன்விசாரணையும் செய்யாமல் பேரூராட்சி அலுவலகத்தில் பணி செய்து கொண்டிருந்த என்னை பயங்கர குற்றவாளியை பிடிப்பது போல் பெரும் போலீஸ் படையுடன் வந்து கைது செய்ய முற்பட்டனர்.
நான் கைதிற்கான விளக்கத்தை கேட்டேன். காரணத்தை கூட சொல்லாமல் மிகவும் தகாத வார்த்தைகளால் என்னை பேசி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றார்கள். தகவல் அறிந்து வந்த என் மனைவியும், மகளையும் என்னை பார்ப்பதற்கு கூட அனுமதிக்கவில்லை. பேரூராட்சி தலைவர் என்ற மரியாதையும் எனது மனைவிக்கு கொடுக்கப்படவில்லை.
வேறு வழி இன்றி எனது மனைவி, ஊர் மக்கள் உதவியும் கட்சி சார்ந்தவர்களின் உதவியையும் நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனது மனைவி அளித்த தகவலின் பேரில் திமுக ஒன்றிய செயலாளர் பெரியசாமி மற்றும் பேரூராட்சி சார்ந்த அனைத்து கட்சி வார்டு உறுப்பினர்களும் காவல் நிலையத்திற்கு வந்தனர். ஒன்றிய செயலாளர் பெரியசாமி ஏன் இப்படி ஒரு முன் விசாரணை கூட இல்லாமல் பேரூராட்சி அலுவலகம் என்றும் பாராமல் அத்துமீறல் செயல்களில் ஈடுபடுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அவரையும் ஒருமையில் திட்டி அவர் மீதும் வழக்கு பதிவு செய்து விடுவேன் என்று மிரட்டி காவல் நிலையத்தில் அமர வைத்து அவர் மீதும் வழக்குப்பதிவு செய்துவிட்டார்.
வேங்கைவயல் கொடூரத்தின் ஓராண்டு நிறைவு: குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது எப்போது? அன்புமணி கேள்வி
மேலும் காவல் ஆய்வாளரின் கூட்டாளியும் புகார்தாரருமான போலீஸ் மூர்த்தி என்பவர் பகிரங்கமாக நீங்கள் என்ன செய்தாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது தன்னை வாரம் இரு முறை மாவட்ட அமைச்சர் போனில் அழைத்து நலம் விசாரிப்பதாகவும் பல உயர் அதிகாரிகள் தனக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களாக இருப்பதாகவும் உங்களால் முடிந்தால் யாரிடம் வேண்டுமானாலும் என்னைப் பற்றி கூறுங்கள் என்றும் திமுகவின் மிக மிக முக்கிய குடும்பத்தின் பெயரை குறிப்பிட்டு எனக்கு பின்னால் இவர்கள் இருப்பதாகவும் ஆகவே தனக்கும் காவல் ஆய்வாளர் மசூதா பேகத்திற்கும் இரண்டு கோடி ரூபாய் கொடுத்தால் மட்டுமே புகாரை வாபஸ் பெறுவேன் என்றும் கூறினார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இவர் மீது ஏற்கனவே ஈரோடு மாவட்டத்தில் நில அபகரிப்பு சம்பந்தமான பல வழக்குகள் பதிவாகியுள்ளன. எனவே என் மீது கொடுத்த பொய்யான புகாரை வாபஸ் பெற வேண்டும். எனது சொத்து மீது நில மோசடி நபருடன் இணைந்து காவல் ஆய்வாளர் மசூதா பேகம் எனது கையெழுத்தையும், போலியான ஆவணத்தையும் தயாரித்து நில மோசடியில் ஈடுபட்டு எனது சொத்தை அபகரிக்க முயன்றதற்காக அவர் மீது தமிழக காவல்துறையும் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும், தமிழக அரசுக்கும் புகார் மனு அளித்துள்ளோம்.
திமுக பெயரை உபயோகப்படுத்தி இது போன்ற நபர்கள் மோசடி செயலில் ஈடுபட்டு வருவதும் காவல்துறையில் செயல்பட்டு கொண்டு குற்றவாளிகள் உடன் இணைந்து அராஜகத்தில் ஈடுபட்டு வரும் அதிகாரிகளினாலும் நடைபெற்று வரும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்கு பெரும் அவ பெயரை ஏற்படுத்தித் தரும் எனவே தமிழக முதலமைச்சர் இதுபோன்ற புகார்களை நேரடியாக கவனத்தில் எடுத்துக் கொண்டு உடனடியாக கண்டிப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.