கேரளாவை போல் மக்கள் அதிகாரிகளை கேள்வி கேட்க வேண்டும் என ஈரோடு கதிரம்பட்டி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா சிறப்புரையாற்றினார்.
ஈரோட்டில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு ஈரோடு ஊராட்சி ஒன்றியத்தின் கதிரம்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா கலந்து கொண்டார். கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை, மருத்துவத்துறை, கால்நடை பராமரிப்பு துறை,வேளாண் துறை, சமூக நலத்துறை, மின்சாரத்துறை, நெடுஞ்சாலத் துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டு பொது மக்களின் துறை சார்ந்த சந்தேகங்களை தெளிவுபடுத்தி மக்களின் குறைகளை கேட்டு அறிந்தனர்.
undefined
கூட்டத்தில் கதிரம்பட்டி ஊராட்சி பொதுமக்கள் வார்டு உறுப்பினர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கலந்து கொண்ட பொதுமக்கள் தங்களின் குறைகளை புகார் மனுவாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் பொதுமக்கள் அளித்திருக்கும் புகார் மனுக்களை உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பஞ்சாயத்து ஊழியர்கள் 6 பேரை வைத்து கிராம சபை கூட்டத்தை முடித்த பஞ்சாயத்து நிர்வாகம்
அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட இடத்திற்கே சென்று உடனடி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட நபர்களை அழைத்துக் கொண்டு உடனடியாக புறப்பட்டு சென்றனர். கூட்டத்தில் சமூக நலத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம்,பெண் குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்போம், பெண் சிசுக்கொலையை தடுப்போம் என்பது போன்ற உறுதிமொழிகளை அதிகாரிகளும், பொதுமக்களும் ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து சிறப்பாக பணியாற்றும் பணியாளர்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் சால்வை அணிவித்து நினைவு பரிசுகளை வழங்கினார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா கிராம சபை கூட்டம் என்பது பொதுமக்கள் அதிகாரிகளை நேரடியாக சந்தித்து தங்கள் குறைகளை தெரிவிக்கும் இடமே கிராம சபை கூட்டம். இது பற்றி பொதுமக்கள் இன்னும் விழிப்புணர்வு கொள்ள வேண்டும். நமது அண்டை மாநிலமான கேரளாவில் இது போன்ற கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் கேள்வி கேட்பார்கள், அதிகாரிகள் பதில் கூறுவார்கள். நம் மாநிலத்திலும் அது போன்று பொதுமக்கள் தைரியமாக பேச வேண்டும். குறைகளை மட்டுமே கூறும் இடமாக இல்லாமல் அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் நல்லுறவு ஏற்படுத்தும் இடமாகவும் அமைய வேண்டும் என கூறினார். இறுதியாக கதிரம்பட்டி துணை மின் நிலைய வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.