துணி காயவைக்கும்போது நேர்ந்த விபத்து; மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலி

By Velmurugan s  |  First Published Sep 19, 2023, 9:49 AM IST

தாளவாடி அருகே துணியை காயவைக்கும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்த பெண் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.


ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன் (வயது 50). கூலித் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜோதி (26). மகள் ஜோதிக்கும், கர்நாடகா மாநிலம் சிக்மங்களூரு பகுதியைச் சேர்ந்த சிவராஜ் (33) என்பவருக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜோதி கடந்த 8 மாதங்களாக கணவரை பிரிந்து தாளாவாடி அடுத்த பாளையம் கிராமத்தில் தனது மகளுடன், தந்தையின் வீட்டில் தனியாக வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

Tap to resize

Latest Videos

undefined

இலங்கைக்கு வரும் இன்னொரு சீன உளவுக் கப்பல்..! தமிழகத்திற்கான ஆபத்து- எச்சரிக்கும் ராமதாஸ்

இதனிடையே ஜோதி வழக்கம் போல் நேற்று துணிகளை துவைத்துவிட்டு அதனை காய வைப்பதற்காக வீட்டின் அருகில் கட்டப்பட்டிருந்த கம்பியில் துணிகளை காய வைத்துக் கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கொடி கம்பியின் வழியாக ஜோதியை மின்சாரம் தாக்கி உள்ளது. இதனால் தூக்கி வீசப்பட்ட ஜோதி மயங்கி விழுந்தார்.

TTF Vasan Arrest: வீலிங் செய்து வில்லங்கத்தை விலைக்கு வாங்கிய டிடிஎஃப் வாசன்.. ஹாஸ்பிடலில் வைத்தே கைது..!

இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஜோதி ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறி அவரது உடலை உடற்கூறாய்விற்காக எடுத்துச் சென்றனர். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!