குடிபோதையில் இருசக்கர வாகனத்தை பேருந்தில் சொருகியவரால் பரபரப்பு - சிசிடிவியில் பதிவான காட்சிகள்

Published : Aug 09, 2023, 06:20 PM IST
குடிபோதையில் இருசக்கர வாகனத்தை பேருந்தில் சொருகியவரால் பரபரப்பு - சிசிடிவியில் பதிவான காட்சிகள்

சுருக்கம்

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி, புதூரில் அரசு பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்ட நிலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர் படுகாயங்களுடன்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஆப்பக்கூடல் வெள்ளாளபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணு பாரத். இவர் தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து கவுந்தப்பாடி புதூர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது ஆப்பக்கூடல் பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கவுந்தப்பாடி நோக்கி  வந்து கொண்டிருந்த அரசு நகரப் பேருந்தும், விஷ்ணு பாரத் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனமும் கவுந்தப்பாடி புதூர் சாய்பாபா கோவில் அருகில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற விஷ்ணு பாரத்க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக விபத்தில் சிக்கிய விஷ்ணு பாரத்தை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கவுந்தப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நல்ல பாம்பை நாவால் தடவி கொடுத்து நட்பு பாராட்டும் பசு; இணையத்தில் வைரலாகும் இயற்கையின் விநோதம்

மேலும் இது குறித்து தகவல் அறிந்த கவுந்தப்பாடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்ததில், இரு சக்கர வாகனத்தில் சென்ற விஷ்ணு பாரத் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. மேலும் விஷ்ணு பாரத் நிதானமில்லாமல் அரசுப் பேருந்து மீது மோதியது அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஈரோடு மூதாட்டி கொ*லை வழக்கில் திடீர் திருப்பம்! வெளியான அதிர்ச்சி காரணம்! சிக்கிய நபர்?
ஒரு மாதத்திற்கு பின் தோண்டி எடுக்கப்பட்ட சடலத்தின் பின்னணி! விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!