உலகத் தமிழ் தொழிலதிபர்கள், திறனாளர்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது
ஈரோட்டில் தி ரைஸ் எழுமின் அமைப்பு சார்பாக ஓமன் நாட்டில் நடைபெறும் பன்னிரண்டாவது உலகத் தமிழ் தொழிலதிபர்கள், திறனாளர்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஓமன் நாட்டு தூதுவர்கள் கலந்து கொண்டு ஓமன் நாட்டின் தொழில் வளர்ச்சிகளைப் பற்றி விளக்கம் அளித்தனர்.
தொடர்ந்து அவர்கள் கூறுகையில், “ஓமன் நாட்டில் கனிம வளம் சார்ந்த தொழில் தொடங்குபவர்களுக்கு ஓமன் நாடு சொர்க்க நாடாக அமையும். மேலும், உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவின் மீன் சந்தை ஐரோப்பாவில் சுருக்கப்பட்டதால் ஐரோப்பிய வட அமெரிக்க நாடுகளுக்கான மீன் பொருட்கள் ஏற்றுமதி ஓமன் நாட்டில் மிக பெரிய வாய்ப்பாக தெரிகிறது. ஒற்றை சாளர வழி மூலமாக குறைந்த செலவில் தொழில் தொடங்க முடியும்.” என்றனர்.
தனிநபர் வருமான வரி இந்த நாட்டில் இல்லை என்ற அவர்கள், மிக அதிகபட்ச வரியாக 5% வரி மட்டுமே விதிக்கப்படுகிறது என்றனர். நிதி நிறுவனங்களுக்கு எளிதாக கடன் உதவிகளை ஓமன் நாடு வழங்குவதாகவும், ஓமன் நாடு நாம் ஈட்டுகின்ற லாபத்தை முழுமையாக நாம் விரும்புகின்ற இடத்திற்கு எடுத்துச் செல்ல அனுமதி வழங்குகின்றது என்றும் கூறினர்.
வானதி சீனிவாசன் பூரண நலம் பெற கோயில்களில் சிறப்பு வழிபாடு!
இது குறித்து காங்கிரஸ் நிர்வாகி மக்கள் ஜி ராஜன் கூறுகையில், “இந்த மாநாட்டில் நான்கு துறை அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள். தமிழ்நாட்டின் சிறு குறு தொழில் முனைவோர்கள் ஓமன் நாட்டில் தங்களது தொழில்களை தொடங்குவதன் மூலம் அபிரிவிதமான வளர்ச்சியை காண முடியும். லஞ்ச ஊழல் எதுவும் இல்லாமல் குறைந்த செலவிலேயே தொழில் தொடங்க முடியும். இந்தியாவில் ஜிஎஸ்டி வரி என்பது அங்கு மதிப்பு கூட்டு வரியாக இருப்பதால் நம் வருமானத்தை மிகப்பெரிய அளவில் சேமிக்க முடியும். எனவே வாய்ப்பை பயன்படுத்தி சிறு குறு தொழில் அதிபர்கள் மற்றும் தொழில் தொடங்க விரும்புபவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பயன் பெற்று வளர்ச்சி அடைய வேண்டும்.” என்றார்.