சேலத்தில் குட்கா விற்ற இந்து முன்னணி தலைவர் கைது

By Dinesh TGFirst Published Oct 4, 2022, 5:16 PM IST
Highlights

தடை செய்யப்பட்ட பான்பராக்,  குட்கா விற்ற வழக்கில் சேலம் கிழக்கு மாவட்ட இந்து முன்னணி தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
 

சேலம் மாநகர் பொன்னம்மாப்பேட்டையில் மளிகை கடை நடத்தி வருபவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் சேலம் கிழக்கு மாவட்ட இந்து முன்னணியின் தலைவராக உள்ளார். இந்த நிலையில் நேற்று அம்மாபேட்டை காவல் நிலைய காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடைகளுக்கு சிகரெட்  விநியோகம் செய்யும் ஸ்ரீதர் என்பவரை நிறுத்தி சோதனையிட்டனர்.

கரூரில் மைல் கல்லுக்கு படையலிட்ட நெடுஞ்சாலை பணியாளர்கள்

அப்போது அவரிடம் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா  9 கிலோ அளவில் இருந்தது. இதனையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலாவை, இந்து முன்னணியின் கிழக்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து வாங்கி வந்ததாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா விற்பனை செய்ததை கிருஷ்ணமூர்த்தி ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து இந்து முன்னணி மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சிகரெட் வியாபாரி ஸ்ரீதர் ஆகிய இருவரையும் அம்மாபேட்டை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருமாவளவன், சீமானை கைது செய்ய வேண்டும்..! டெல்லியில் 10 பேருடன் ஆர்ப்பாட்டம் நடத்திய அர்ஜுன் சம்பத்

தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா விற்பனையில் சேலம் கிழக்கு மாவட்ட இந்து முன்னணி தலைவர் கிருஷ்ணமூர்த்தி கைதாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

click me!