சேலம் - கோவை தினசரி பயணிகள் ரயில்.. 18 நாட்களுக்கு ரத்து.. என்ன காரணம் தெரியுமா..?

By Thanalakshmi V  |  First Published Oct 12, 2022, 6:09 PM IST

தண்டவாள பராமரிப்பு காரணமாக இன்று முதல் 18 நாட்களுக்கு சேலம் - கோவை பாசஞ்சர் ரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுக்குறித்து சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை மற்றும் திருப்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளப் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், ஞாயிறு தவிர தினசரி இயக்கப்பட்டு வந்த சேலம் - கோவை மற்றும் கோவை - சேலம் பாசஞ்சர் ரயில்கள் இன்று முதல் 30 ஆம் தேதி வரை 18 நாட்களுக்கு முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:ஹாப்பி நியூஸ்.. மதுரை - ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில்.. என்னென்ன ஸ்பெஷல் அம்சங்கள் ..?

Tap to resize

Latest Videos

இந்நிலையில் தீபாவளி பண்டிகை நேரத்தில் நீண்ட நாட்களுக்கு பாசஞ்சர் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதால் , உள்ளூர் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. 

click me!