2022-ல் தமிழகத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு 24 பேர் இதுவரை உயிரிழப்பு... சுகாதாரத்துறை தகவல்!!

By Narendran SFirst Published Oct 12, 2022, 5:59 PM IST
Highlights

தமிழகத்தில் இந்த ஆண்டு பன்றி காய்ச்சலுக்கு இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் இந்த ஆண்டு பன்றி காய்ச்சலுக்கு இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 2022 ஜனவரி மாதம் தொடக்கத்திலிருந்து இந்த அக்டோபர் மாதம் முதல் வாரம் வரை பன்றி காய்ச்சலால் இதுவரை 1,700 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 24 பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதாரத்துறை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. கடந்த காலங்களில் பார்த்தோம் என்றால் 2018ல் அதிகபட்ச உயிரிழப்புகளை தமிழகம் சந்தித்துள்ளது.

இதையும் படிங்க: வீட்டில் ”மசாஜ் சென்டர்” பெயரில் பாலியல் தொழில்.. களமிறங்கிய போலீசார்.. சிக்கிய இடைத்தரகர்கள்..

தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ள கடந்த கால தகவல்களின்படி 2018 இல் 2,812 பேருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் 43 பேர் உயிரிழந்துள்ளார்கள். அதற்கு முன்னதாக 2015 ஆம் ஆண்டு 800 பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டும் கூட 29 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. 2017 ஆம் ஆண்டு 3,315 பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு, 17 பேர் உயிரிழந்துள்ளனர்.  

இதையும் படிங்க: கவுரவ விரிவுரையாளர்களில் 2000-க்கும் மேற்பட்டோருக்கு உரிய தகுதி இல்லை... அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு!!

அதன் பிறகு 2019 முதல் 2021 காலகட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த காலத்தால் அந்த சமயங்களில் பன்றிக்காய்ச்சல் கண்டறிவதற்கான சோதனைகளும் பெருமளவில் நடத்தப்படவில்லை. அதனால் உயிரிழப்புகளும் எதுவும் நிகழவில்லை. செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் பன்றி காய்ச்சலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு அறிவுறுத்தல்களை தமிழக மருத்துவ துறை வழங்கி வருகிறது. மேலும் மழைக்காலத்தில் மக்கள் கூடுதல் கவனமுடன் இருக்குமாறும், காய்ச்சல், சளி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவமனை அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகிறது.

click me!