
தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை லட்சக்கணக்கான நேர்மையான இளைஞர்கள் நிரப்புவார்கள் என்றும் அது விரைவில் நடக்கும் என்றும் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சிஒன்றில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது நான் நேர்மையை எனது பெற்றோரிடம் இருந்து கற்று கொண்டேன் என தெரிவித்தார்.
நேர்மையாக பணியாற்றியதால் கடந்த 24 ஆண்டுகளில் 24 முறை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த சகாயம், அப்படி நான் நேர்மையாக இருந்ததால் தான் மக்கள் என்னை நினைவில் வைத்துள்ளனர் எனறும் பெருமிதம் தெரிவித்தார்.
தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை லட்சக்கணக்கான நேர்மையான இளைஞர்கள் நிரப்புவார்கள் என்றும் அது விரைவில் நடக்கும் என்றும் சகாயம் நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே இன்று இளைஞர்கள் கையில்தான் உள்ளது என்றும், இளைஞர்களின் எழுச்சி சமுதாயத்தை சீர்திருத்தும் என்றும் சகாயம் தெரிவித்தார்.