புது ரூ.2000 நோட்டுகள் சென்னையில் கிடைக்கவில்லை... கொல்கத்தாவில்தான் கிடைக்கிறதாம்...

 
Published : Nov 11, 2016, 01:08 AM ISTUpdated : Sep 19, 2018, 01:24 AM IST
புது ரூ.2000 நோட்டுகள் சென்னையில் கிடைக்கவில்லை... கொல்கத்தாவில்தான் கிடைக்கிறதாம்...

சுருக்கம்

வங்கிகள், தபால் நிலையங்களிலும், இன்று முதல், பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு நிலையில், சென்னையில் பல வங்கிகள், தபால் நிலையங்களில், புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் இன்னும் வந்துசேரவில்லை என தெரியவந்துள்ளது.

மக்கள் காலையில் இருந்தே நீண்ட வரிசையில்,தங்கள் வசம் இருக்கும் பழைய 1000, 500 ரூபாய் நோட்டுக்களை மாற்ற. தபால் நிலையங்களிலும், வங்கிகளிலும் காத்திருக்கின்றனர். 

நாடுமுழுவதும் கடந்த 8 நள்ளிரவு முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மத்தியஅரசு அறிவித்தது. 

பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கிகள் தபால் நிலையங்களில் நவம்பர் 10 முதல் மாற்றிக்கொள்ளலாம் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது.

ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு, வங்கிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இன்றுமுதல் 1000, 500 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ள காலையிலேயே வங்கிகளுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர். சென்னை ரிசர்வ் வங்கியின் முன் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளனர். காலை 8 மணிமுதலே மக்கள் வரிசையாக நிற்கத் தொடங்கிவிட்டனர். இதனால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல, அண்ணாசாலையில் உள்ள தபால் நிலையம், திநகர் தபால் நிலையம், வங்கிகள் முன் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். பணத்தை மாற்றவரும் மக்கள் வங்கிகள், தபால்நிலையங்களில் கொடுக்கப்படும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பின்பே பணத்தை மாற்றுகின்றனர்.

சென்னையில், தபால்நிலையங்கள், வங்கிகள் சிலவற்றில் 2000 ரூபாய் நோட்டுக்கள் கையிருப்பில் இல்லை என்பதால், மக்களுக்கு தற்போது புழக்கத்தில் இருக்கும் 100 ரூபாய் மட்டுமே சில்லரையாக கொடுத்து வருகின்றனர். ஒரு சில வங்கிகள், மட்டுமே புதிய 500 ரூபாய் நோட்டை மக்களுக்கு அளித்து வருகின்றனர்.

அன்றாடம் கூலை வேலைக்கு செல்லும் மக்கள் மட்டும் மின்றி, அலுவலங்களுக்கு செல்வோரும் கையில் சூட்சேஸ், பேக் சகிதமாக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். 

கையில் இருக்கும்பணம் முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டாக இருப்பதால், வீட்டு செலவுக்குகூட பணமில்லை.என்றும், ஆதலால், சிலர் அலுவலகத்துக்கு விடுமுறைபோட்டு புதிய ரூபாய் நோட்டுக்களை பெற வரிசையில் வந்து காத்து இருப்பதாகவும் தெரிவித்தனர். 

PREV
click me!

Recommended Stories

திமுகவை வீழ்த்தியே ஆகணும்..! அதிமுக கூட்டணிக்கு வருகிறது தவெக..? இபிஎஸ் சொன்ன முக்கிய தகவல்..!
ஜனவரி 7ம் தேதி பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு