கரூரில், அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளர் வி.செந்தில்பாலாஜிக்கு வாக்குச் சேகரிக்க வந்த தமிழக அமைச்சர்களை ஆராத்தி எடுத்து பெண்கள் வரவேற்றனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி கரூர் ஒன்றியத்திற்குட்பட்ட புஞ்சைப்புகழூர் பேரூர் கழகத்தில் இருக்கிறது தெற்கு வள்ளுவர் நகர் 8-வது வார்டு.
இங்கு அரவக்குறிச்சி தொகுதி அதிமுகவின் வெற்றி வேட்பாளராக திரு.வி.செந்தில்பாலாஜி போட்டியிடுகிறார்.
இவருக்காக இரட்டை இலை சின்னத்தில் தமிழக அமைச்சர்கள் வாக்குகள் கேட்டனர். எடப்பாடி. பழனிச்சாமி, பி.தங்கமணி, மக்களவை உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் சட்டமன்ற உறுப்பினர் பொன்சரஸ்வதி மற்றும் சென்னை முன்னாள் மேயர் திரு.சைதை துரைசாமி ஆகியோர் பொதுமக்களிடையே வாக்குகள் கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
முதலில் ஜீப்பில் பயணித்துவந்த அமைச்சர்கள் பின்னர், வாகனத்தை விட்டு இறங்கி பொடிநடையாக நடந்து அனைத்து மக்களிடன் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
வீதி வீதியாக சென்று அங்குள்ள வீடுகளில் உள்ளோரிடமும், கடைகளில் இருப்போருடமும் துண்டுப் பிரசுரங்களை கொடுத்து செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக வாக்குகளைச் சேகரித்தனர்.
கரூர் ஒன்றிய செயலாளர் திரு.கே.கமலக்கண்ணன் மற்றும் பு.புகழூர் பேரூர் கழக செயலாளர் திரு. வக்கில் எஸ்.சரவணன் காகிதபுரம் பேரூர் கழக செயலாளர் திரு. வக்கில் சதாசிவம் பொதுமக்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.
வருகை தந்த அமைச்சர்களுக்கு பெண்கள் ஆராத்தி எடுத்து, திலகமிட்டும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கட்சித் தொண்டர்கள் கொடிபிடித்தும், முழக்கங்களை எழுப்பியும் வரவேற்றனர்.
வாக்குச் சேகரிக்க வந்த அமைச்சர்களுக்கு ஆராத்தி வரவேற்பு…