
முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, அருள்மிகு பழனி முருகன் கோயிலில், பக்தர்கள் மலைக்குச் செல்ல இயக்கப்பட்டு வந்த ரோப்கார் சேவை, வருடாந்திர பராமரிப்பு பணிகள் முடிந்து, பக்தர்கள் வசதிக்காக இன்று மீண்டும் இயக்கப்பட்டது.
முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனி முருகன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். குழந்தைகள், முதியவர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் மலைக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்ய வசதியாக, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின் பேரில், ரோப்கார் சேவை சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.
கடந்த மாதம் 5-ஆம் தேதி முதல், வருடாந்திர பராமரிப்பு பணிக்காக ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டு, ரோப்காரில் உள்ள இரும்பு சக்கரங்கள், மின்மோட்டார்கள், இரும்பு கம்பிகள் உள்ளிட்டவை புதுப்பிக்கப்பட்டன. இதனையடுத்து, ரோப்காருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தர்கள் வசதிக்காக இன்று மீண்டும் இயக்கப்பட்டது. ரோப்காரில் பக்தர்கள் ஆர்வமுடன் பயணம் செய்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.