தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மூன்று இடங்களில் பேரணியை நடத்தி வருகிறார்கள். இதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடத்த தயாராக இருந்தனர். அதன்படி 44 இடங்களில் பேரணியை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஏற்கனவே, கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 3 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பேரணியை நடத்த அனுமதி பெற்றிருந்தனர்.
மற்ற இடங்களில் அனுமதி பெறாமல் இருந்த நிலையில் தற்போது கோர்ட்டு அனுமதி வழங்கியதால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பேரணி நடத்த தயாராக இருந்தனர். இதற்கிடையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் 44 இடங்களில் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை தள்ளி வைப்பதாக அறிவித்தனர்.
இதையும் படிங்க..பாஜகவுக்கு தாவும் எடப்பாடி அணி.. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஊழல் பின்னணி.! பற்ற வைத்த ஓபிஎஸ் டீம் !!
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தேரடி வீதியில் இன்று மாலை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தனர். இதனால் கடலூர் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.இதனால், நேற்று இரவு முழுவதும் வாகன சோதனை நடத்தப்பட்டது. அந்த வழியாக சந்தேகப்படும்படி வரும் நபர்களை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
தற்போது கடலூர், திருப்பாதிரிப்புலியூர் தண்டபாணி செட்டியார் தெருவில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் தற்போது தொடங்கியது. அதேபோல கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய இடத்திலும் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடைபெற்று வருகிறது. பேரணி நடக்கும் இடங்களில் தமிழ்நாடு காவல்துறை பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
இதையும் படிங்க..கோவை கார் வெடிப்பில் சிக்கிய பென் டிரைவ்.. 100க்கும் மேற்பட்ட ஐஎஸ் அமைப்பு வீடியோக்கள் - பரபரப்பு பின்னணி !
இதையும் படிங்க..2022ம் ஆண்டு முடிய 60 நாட்கள் தான் இருக்கு, ஆனா ? மீண்டும் சுனாமி.. நாஸ்டர்டாமஸ் கணிப்பு பகீர்