மழைக்கால விடுமுறைகளை ஈடுசெய்யும் வகையில் சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,” கொரோனா தொற்று காரணமாக நடந்த கல்வியாண்டில் பாடத்திட்டம் குறைக்கப்பட்டது. ஆனால் நடப்பாண்டில் கொரோனா முந்தைய நிலைமை தான் தொடர்கிறது.
இதனால் ஆசிரியர்கள் முழு பாடத்திட்டத்தை எடுக்க வேண்டியது உள்ளது. எனவே தீபாவளி மறுநாள் விடுக்கப்பட்ட விடுமுறை பதிலாக வரும் 19 ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாக நடைபெறும்.
மேலும் படிக்க:நீக்கப்பட்டவர்கள், நீக்கப்பட்டவர்கள் தான். இணைப்புக்கான பேச்சுக்கே இடம் இல்லை- ஓபிஎஸ்யை அலற வைத்த இபிஎஸ்
வடகிழக்கு பருவமழையை ஒட்டி தொடர் மழை காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. இந்த மழைக்கால விடுமுறை நாட்களை ஈடுசெய்ய தேவை ஏற்பட்டால், சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தப்படும் என்று அவர் அறிவித்தார்.
மேலும் படிக்க:மனுஸ்மிருதி பிரதியை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கிய திருமா.! ஆர்எஸ்எஸ் பேரணியை எதிர்ப்பது ஏன்..! புதிய விளக்கம்