தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும்.
சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க;- சாலை விபத்தில் காயமடைந்த இளைஞர்... பட்டென காரிலிருந்து இறங்கி வந்து முதலுதவி செய்த தமிழிசை!!
undefined
தாம்பரம்:
சிட்லப்பாக்கம் வேளச்சேரி மெயின் ரோடு, காமராஜர் தெரு, தனலெட்சுமி நகர், திருவள்ளுவர் நகர், கணபதி காலனி பல்லாவரம் பஜனை கோயில் தெரு, ராஜாஜி நகர், தர்கா ரோடு, பச்சையப்பன் காலனி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
அடையார்:
வேளச்சேரி பைபாஸ் ரோடு (ஏக்சலண்ட் மருத்துவமனை முதல் ஜி.ஆர்.டி வரை), மேட்டுத்தெரு, நாட்டூர் தெரு, ராஜலட்சுமி பகுதி முழுவதும் ராஜ்பவன் ராசாவிட் ஹோட்டல், சங்கீதா ஹோட்டல், திரு.வி.க. தெரு, அன்பில் தர்மலிங்கம் தெரு, நேரு நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- சென்னையில் கனமழை பெய்ததன் எதிரொலி... வீடு இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!!